பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


போன சிறகுகள், இன்னும் இடந்தேடி அலைந்து கொண்டு இருந்தன.

அந்தப் பறவையின் சொந்தக்காரன் வங்கக் கடலோரக் கல்லறையிலே நீடு துயில் கொண்டிருக்கின்றான்.

"பறவை மிக உயர்ந்தது" இந்த விமரிசனம், அந்தப் பறவைக்கு இறந்துபோன அவரது அண்ணா அவர்கள் தந்த இலக்கியப் பாராட்டு!

கழகத்தை விட்டுக் கை நழுவி விட்ட அந்தப் பறவை - காணாமற் போன போது, வளர்த்தவனுடைய விழிகள் - வானை அண்ணாந்து பார்த்தன.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அந்தப் பறவை எங்கோ போவதாக அவர் கேள்விப் பட்டார்.

திராவிடர் கூட்டிலிருந்து தேசிய மரத்திற்கு, கேட்பார் பேச்சைக் கேட்டு, முன் கோபத்தோடு, தனது சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு - பறந்து போன கவிதைப் பறவை அது.

அதற்கு அரசியல் சுருதி உண்டு - ஆனால், தாளம் தான் ஒழுங்காக இல்லை! காரணம், குழந்தை மனம்!

அது குந்திப் பாடுவதற்காக விரிக்கப்பட்ட பாயில் - ஊதைக் காற்று உட்கார்ந்திருப்பதாகவே - வளர்த்தவர் நினைத்தார்!

அந்தப் பறவை - ஒரு கவிதை அதனுடைய வேர், பாதாளத்தில் இருந்தது. குருத்து மட்டும் கருகி - மொட்டாகி விட்டது!

ஆனால், அது பாடிய பாட்டுக்கள் - இன்றும் பசுமைப் புரட்சிகளை இலக்கிய வயலிலே முப்போகமாக விளைவிக்கின்றன.

அது, சூடிய “பா” மாலைகள், இலக்கிய மலர்கள் அத்தனையும் இன்று வரைச் செத்துப் போனதில்லை. நாற்றத்தை நாட்டிலே பரப்புகின்றன!

வீணையாய் இருந்த பறவை - எடுப்பார் கைகட்கு மாறி மாறி - வீணாகி விட்டது: "முகநக நட்பு” என்போர் அடுப்புக்கு அந்த கவித்துவ வீணை விறகாகிவிட்டது!

91