பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


காரணம், முன்பின் என்று கட்சித் தொண்டுகளின் பருவ காழ்ப்புத் தேள்கள். அக்கட்சிக்குள்ளேயே ஒன்றுக்கு ஒன்று கொட்டிக் கொண்டிருந்த அழுக்காற்றுக் குடைச்சல்கள் தான்.

உனக்கு முன்னால் விரிந்திருக்கின்ற வானம் - உனக்குச் சொந்தமில்லையா?

அந்த வானத்தில், சாகாத அன்பை உன்னை வளர்த்தவன் எழுதி வைக்கவில்லையா?

நீர் கைவிடப்பட்ட குமாரன் இல்லையே! உன்னை மேய்த்தவனுடைய இதயம் உனக்குப் புல்வெளியாகத் தோன்றவில்லையா?

நீர் பெற்ற புதிய கட்சியின் அரசியல் அனுபவங்களை, அவனுக்கு முத்தமிழ் விருந்தாகப் படையலிடும்!

அவனுடைய புல்லாங்குழல் ஓசைக்கு முன்னால் - உனது காதுகளை நிமிர்த்திக் கேள் ஔ!

எதையும். அவன் காலடியிலே வைத்துவிட்டு, உனது இதயத்தை மறுபடியும் உனக்கே சொந்தமாக்கிக் கொள்!

இலையுதிர்ந்த மரமல்ல நீர்! இன்னும் சுருண்டு கிடக்கின்ற இளந்தளிர்கள் அவிழாத கிளைகளை - நீர் வைத்திருக்கின்றீர்!

போகக் கூடாத இடத்திற்கு நீர் போகவில்லை - ஆனால், வரக்கூடாத நேரத்தில்தான் வர நினைக்கின்றீர்.

இதற்கிடையில், நீர் பாடிய சத்தங்கெட்டப் பாக்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை !

திராவிடரியக்கத் தோட்டத்திலே மலர்ந்து மணம் பரப்பிய மல்லிகை அல்லவா நீர்?

நீர் பிறந்த அரசியல் கருப்பை - அசோகா ஓட்டலுக்குள்ளே இருக்காது! ஏனென்றால், கழகத்தை விட்டுப் பிரிந்துபோக அங்கேதானே உமது நெஞ்சமென்ற நிலத்திலே வித்திடப்பட்டது.

அது, அண்ணா என்ற அன்னையின் குடல்! அது, நீரும் - சகதியுமாகத்தானே இருக்கும்!

அதில் இன்னும் வடியாத அன்பு மட்டும் - எந்த இடத்திலும் இருக்காத அளவு உன் மீது குடி கொண்டிருக்கிறது.

92