பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


யாருக்காக நீர், கதறிக் கண்ணீர் விட்டீரோ - அந்தத் தாய் மனத்தவர் உமக்கு இலைபோட்டு இப்படியா பறிமாறினார்?

வீட்டுச்சோறு வேண்டாமென்று, நீர் மாற்றார் விருந்துக்குச் சென்றவர்தானே?

அங்கே உமது மரியாதை பறிபோனது பற்றி - உம்மை வளர்த்தவர் மரணமான பிறகுதானா சொல்ல வேண்டும்?

ஜீவனற்ற கண்ணீரைச் சிந்துகின்ற பாட்டுப் பறவையே! காலமும் ஓலயிடுகின்றதே - உமது எழுத்தைப் படித்து!

உம்முடைய வரவு எப்போதும் அதிகம்தான்! ஆனால், செலவை அதிகமாக்கிக் கொள்ள நீர்தானே துள்ளித் துடித்தீர்?

உமது சொந்தப் புத்திகள் தவறு செய்யலாம்! ஆனால், உமது தந்தையின் புத்தி இனியாவது காப்பாற்றட்டும்!

நீர் ஒரு “கோப்பை!" அதை, நீரே பல தடவை கூறியிருக்கிறீர்! 'கோப்பையிலே என் குடியிருப்பு' என்று!

குழந்தை உள்ளத்தோடு பலர் அறிய அதைத் திரைப்படத்திலே பாடியும் தொலைத்து விட்டீர்!

உள்ளதை உள்ளபடியே உரைப்பவனால்தான் - உண்மையான உரிமை வரலாற்றை உலகுக்கு எழுதமுடியும் என்பதை, காந்தியடிகளுக்குப் பிறகு உணர்த்திய பறவை நீர்.

அந்தக் கோப்பையிலே உமது தந்தைதான் குடியிருக்கிறார் - திராட்சை ரசமாக !

அவரும் இப்போது வற்றிவிட்டார், சாறு இருந்த இடத்தை - நீர் முகர்ந்து பாரும்.

உமது பாசத் தலைவர், விலை மதிக்கமுடியாத வாசத்தை வீசிக் கொண்டிருப்பார்!

கூடு கட்டத் தெரியாத குயில் நீர்! காக்கையை நம்பி யாக்கையை வளர்த்தீர்!

நீர், செல்லாக் காசல்ல! உம்முடைய சந்தை காஞ்சி புரத்திலேஇருக்கின்றது!

தன்னம்பிக்கை வையும் பொன்னான எதிர்காலம் உமக்குப் பூரித்து நிற்கிறது.

94