உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


உமது அண்ணன்தான் - உமக்கு இரு கண்களாக இருந்தார்! அவருடைய ஈரலை உமது எழுத்தால் எண்ணற்ற முறை நீர் வதைத்தீர்!

அந்தத் தலைவன், வைதாரையும் வாழ வைப்பவர்!பதமான சொற்களால், இதமாகப், பகையைக் கூட நெருங்கிப் பார்த்துப் பாசம் ஊட்டியவர்!

அவர் விடுத்த சாபம்தான், உம்மைப் பாதாளத்தில் பயிராக்கிக் கொண்டிருந்தது!

விமானத்தில் இருந்து விழுந்தவரல்ல நீர் - பொது வாழ்விலிருந்து விலகி - பிரிந்து, எடுப்பார் பொருளாய் வீதியிலே போய் விழுந்தவர்!

கடலில் நீர் மிதக்கவில்லை - கண்ணீரில் சிதக்கின்றீர்! யாரையும் பிடித்துக் கொண்டு நீந்த வேண்டிய அவசியமில்லை உமக்கு!

அதோ பார்! ஒரு கரும் படகு வருகின்றது. அதிலே, உமக்கு அறிமுகமானவர் அமர்ந்திருக்கின்றார்.

அவருக்கு சீவாத தலை! - சரி பொருத்தமில்லாத சொக்காய்! - காவிப் படர்ந்த பற்கள் - கருத்து ஒளியூட்டும் கண்களும் உண்டு.

நீர், அதிலே ஏறிக் கொள்ளும்! அவர் உம்மைக் கரை சேர்ப்பார்! அதே நேரத்தில் - உமது கறையையும் கழுவுார்!

உமது நெஞ்ச நெருப்பு குளிருகின்ற இமயம் அது. அறுந்துபோன உமது வீணையை வாசிக்கும் பல்கலை வித்தக வித்வான் அவர்!

நீர் ஓர் அறிவிலியல்ல - காரணம், உன்னை வளர்த்தவர் அறிஞர் திரு நாவுக்கரசர் - செஞ்சொல் வித்தகர்!

நீர், குழந்தை - குழி விழுந்த உம் கன்னத்தில் முத்தமிட - அவர் அதோ. உதடுகளை அருகில் கொண்டு வருகிறார்.

உமது கன்னம் முத்தத்தால் நிரம்பி வழியட்டும்! அவர் கன்னத்துக்கு நீ தாசனாக இரு! - கண்ணுக்கும் தாசனாக மாறு!

வீணையே பாடு கவிதையே எழுது!

95