பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


நெஞ்சே நினை! வஞ்சனையற்ற உள்ளமடா

உனது உள்ளம்!

காயும்போது பிறரை நீர் நன்றாகவே காய்கிறீர்!

உம்மையே குத்திக் கொள்ளும்போது, அதைவிட வேகமாகவே நீர் குத்திக் கொள்கிறீர்! இதுதான் தன் நிலை !

வாழத் தெரியாதவன் பட்டியலிலே வந்து விட்ட வரிகளாகி விட்டீரே!

சமாதிக்கு வா! சாந்தமடை! உமது சரித்திரம் முடிந்து விடவில்லை!

சந்தனப் பெட்டியிலே நமது சந்ததி உறங்குகின்றது - எதையும் தாங்கும் இதயத்தோடு!

சிந்தனைப் பெட்டியிலே உமது உறுதி இன்னும் சிதையாமல் இருக்குமென்று நம்புகிறேன்.

சிந்தனைக் குயிலே!

சீர்குலையாப் பொதிகைக் காற்றே !

சிந்தி! சிந்தி!! பிறகு சில்லென்று வீசுக, தாய்க் கழகம் நோக்கி!

96