பக்கம்:அரசியர் மூவர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை 99


அன்னையின் அறவுரை

"மகனே, உன் தந்தை ஏவியது (அறம்) அன்று என்று எண்ணாமல், இந்நிலத்தை உன் தம்பிக்குத் தந்து நீவிர் நால்வரும் ஒற்றுமையுடன் பல காலம் வாழ்வீர்களாக" என்று அறவுரை கூறுகிறாள். இப்பாடலின் முதல் அடி கூர்ந்து நோக்கற்குரியது. “மன்னவன் ஏவியது அன்று எனாமை” என்று பாடல் நேரே செல்லவும், உரைகாரர்'ஏவியது (அறம்) அன்று என்று ஒரு சொல்லை வருவித்துப் பொருள் கூறியுள்ளனர். இராமன் கூறிய விடையில் 'பரதன் முடி சூடப் போகிறான்.” என்று கூறினானே தவிர, அவன் முடிசூட ஆணை தந்தது யார் என்பதைக் குறிப்பிடவில்லை. அவ்வாறு இருந்தும், கோசலை கூற்றாய் அமைந்துள்ள இப்பாடல், “அரசன் ஆணை இடாவிடினும்” என்று தொடங்குகிறது. இதனால் ஏற்படும் சிக்கல் பெரியது. மன்னன் ஆணை இது என்பதைக் கோசலை எவ்வாறு உணர்ந்தாள்? இத்துணைப் பெரிய செயலை அரசனை அல்லாமல் வேறு ஒருவரும் செய்ய இயலாது என்று கோசலை ஊகித்துக் கூறியதாக அவர்கள் நினைக்கின்றார்கள் போலும்

மைந்தனாகிய இராமனை அல்லாமல் தசரதனுக்கு உயிர் வேறு இல்லை என்பதை நன்கு அறிந்த ஒருத்தி உண்டெனில் அவள் கோசலையே. அப்படி இருக்க, மன்னவன் இவ்வாறு துணிந்து கூறி இருப்பான் என்று எவ்வாறு கோசலை முடிவுக்கு வந்தாள்? இராமன் கூறியவுடனே இவ்வாறு பரதனுக்கு முடியைப்பெறத்தரக் கூடியவர் யார் என்பதை அவள் ஊகித்துவிட்டாள். பன்னெடுங்காலம் தசரதனுடன் வாழ்ந்து, அவன் முதற்தேவியாகவும் உள்ள கோசலைக்குத் தசரதனுடைய மனநிலை விளங்காமலா போய்விடும்? அவன் எவற் றைக் கூறுவான்? எவற்றைக் கூறத் துணியமாட்டான்? என்ப வற்றை அப்பெண்ணரசி அறிய முடியாதா? இராமன் கூறினவுடனே கோசலைக்கு இவ்வாறு யார்கூறி இருக்க முடியும் என்ற ஊகம் பிறக்க கைகேயியைப் பற்றி முடிவு செய்துவிட்டாள். பெண்களுக்கு இயற்கையாகவே முன்கூட்டி ஒன்றனை அறியும் ஆற்றல் (Intution)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/101&oldid=1496201" இலிருந்து மீள்விக்கப்பட்டது