பக்கம்:அரசியர் மூவர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 ☐ அரசியர் மூவர்



பதினான்கு ஆண்டுகள் வனத்திடை வாழப்போகிறான் என்பதையும் அதனைத் தடுக்கத் தனக்கு வன்மை இல்லை என்பதையும் உணர்ந்துகொண்ட அத்தாய் மனம், வேறு வழி இன்றி எஞ்சியுள்ள ஒரே முடிவைச் செய்யத் துணிந்துவிட்டது. இராமனைத் தன்பால் நிறுத்திக் கொள்ள இயலவில்லையாயின், தான் இராமனுடன் சென்று விடலாம் அன்றோ? -

"'சாக லாஉயிர் தாங்கவல் லேனையும்
போகில் நின்னெடும் கொண்டனை
போகெ'ன்றாள்.” (1623)


தாய் மனம் செய்த இந்த முடிவை மகன் ஏற்றுக்கொள்ள முடியுமா? எத்துணைச் சிறந்த தலையாய தாயன்பே ஆயினும், கணவன் உயிருடன் இருக்கின்ற வரை அவனுக்குச் செய்ய வேண்டிய கடமையின் பின்னே வர வேண்டுவது அன்றோ அத்தாயன்பு? எனவே, சிறந்த பண்புடையவனாகிய இராமன், அதனை இப்பொழுது நினைவூட்டுகிறான்.

"'என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத் தாதுஉடன்
துன்னு கானம் படரத் துணிவதே?
அன்னை! நீஅறம் பார்க்கிலை ஆம்,' என்றான்.”

“ வரிவில் எம்பிஇம் மண்அர சாய்அவற்கு
உரிமை மாநிலம் உற்றபின் கொற்றவன்
திருவில் நீங்கித் தவம்செயும் நாளுடன்
அருமை நோன்புகள் ஆற்றுதி யாம்அன்றே?”
(1624,1625)


எது வரினும், எது போகினும் கணவனுடைய நலம் தீங்குகளிற் பங்குகொள்ள வேண்டிய கடமையே ஒரு பெண்ணுக்கு முதன்மை யானது என்பதை இராமன் தன் அருமைத் தாய்க்கு நினைவூட்டு கிறான். இராமன் வேண்டுகோளின் உண்மையை உணர்ந்த கோசலை அதனை மறுக்கவும் மாட்டாமல், ஏற்றுக் கொள்ளவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/108&oldid=1496914" இலிருந்து மீள்விக்கப்பட்டது