பக்கம்:அரசியர் மூவர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 ☐ அரசியர் மூவர்



கரையா அயர்வேன் எனைநீ கருணா லயனே!
என்என்று
உரையா இதுதான் அழகோ? உலகுஏ ழுடையாய்'
என்னும்.”
(1637)


இதற்கு முன் உள்ள பாடல் தசரதன் மாட்டு அவள் கொண்டிருந்த பெருமதிப்பையும் காட்டுகிறது. “உலகம் பொருள் அற்றிட அருளக் கருதிற்று” என்ற அடியால் தசரதன் இறந்து பட்டால் உலகம் பிரளயம் வந்து அழிந்தது போலக் கலங்கிவிடுமே என்று கலங்குகிறாள். ஏனைய மன்னர்களைப்போலத் தன் கணவனும் ஒருவனே என்று நினையாமல், இவ்வாறு கூறுவதால், அவனிடம் அவள் கொண்டிருந்த பெருமதிப்பே வெளியாகிறது. அடுத்து இதன் காரணத்தை இன்னும் முற்றும் அறிந்து கொள்ளக் கூடாமையின், “மன்னன் தகைமை காண வாராய்மகனே!" என்னும் கோசலையின் இந்தப் பெருந்துயரம் வசிட்டன் வரை எட்டி, அவனும் அங்கு வந்துவிட்டான்.

தசரதன் அவசமுற்ற நிலையில் அரற்றும் பொழுது கோசலைக்கு ஒரு புதிய நினைவு வருகிறது. 'மாற்றாளே இந்தச் துயரைச் செய்தாள்,' (1656) என்பதை உடன் அறிந்து கொண்டாள். ஆனால், இராமன் இதுபற்றி ஒன்றும் அறியாமல் அரசன் தானாகவே இவ்வாறு செய்துவிட்டான் என்று நம்பித்தானே தன்னிடம் கூறினான்? எனவே, இராமனை இப்பொழுது வாராய்' என அழைக்கிறாள். தன் கணவன் ஒரு நாளும் இம்மாதிரி தானே வேண்டுமென்று செய்திருக்கமாட்டான் என்ற அவளுடைய எண்ணம் உண்மையாகிவிட்டது. எனவே, தன் கணவனைப்பற்றித் தவறான எண்ணங்கொண்டுள்ள மகனுடைய மன நிலையை மாற்றவேண்டும் என்று கருதியதால், “மன்னன் தகைமை காண வாராய் மகனே.” (1638) என்று ஓலமிடுகிறாள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/112&oldid=1496933" இலிருந்து மீள்விக்கப்பட்டது