பக்கம்:அரசியர் மூவர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 111


 வசிட்ட முனிவன் வந்து உபசரித்த பின்னரே தசரதன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். அம் முனிவனும் மன்னனும் தனித் தனியே வேண்டியும், கைகேயி சற்றும் இணங்க மறுத்துவிட்டாள். இம்மூவரும் பேசிக்கொண்டதைக் கேட்ட பிறகுதான் கோசலை மனத்தை அழுத்திக்கொண்டிருந்த பெரும்பாரம் குறையலாயிற்று. கணவனே இராமனைக் காட்டுக்கு அனுப்பக் காரணமாய் இருந்தானோ என்று அவள் மனத்தில் ஒரு மூலையில் தோன்றிய ஐயம் இப்பொழுது முற்றிலும் நீங்கிவிட்டது.

“மாற்றாள் செயலாம் என்றும்
      கணவன் வரம்ஈந்து உள்ளம்
ஆற்றாது அயர்ந்தான் என்றும்
     அறிந்தாள் அவளும் மனத்தைத்
தேற்றா நின்றாள்; மகனைத்
     திரிவாய் என்றாள் அரசன்
தோற்றான் மெய்என்று உலகம்
     சொல்லும் பழிக்குச் சோர்வாள்.”
(1656)


இராமன் காடு செல்ல நேரிட்டமைக்கு முற்றிலும் பொறுப்பாளி தன் மாற்றாளாய கைகேயியே என்பதைத் தெரிந்துகொண்ட கோசலை, ஒரு நல்ல செயலைச்செய்ய முனைந்தாள். பெண்ணாய்ப் பிறந்த அவளுக்கே மற்றொரு பெண்ணின் மன நிலையைக் காண முடியும். எனவே, அவள் முனிவனைப் போலத் தானும் கைகேயியை நோக்கி வேண்டவில்லை. இறுதிவரை இராமனைப்பெற்றதாயாகிய அவள், கைகேயியை நோக்கி ஒரு சொல்லைக்கூடச் சொல்லாதது சற்று வியப்பையே தருகிறது. உலகம் முழுவதும் அஞ்சி மரியாதை செய்யும் வசிட்ட முனிக்கும், காதற்கணவனுக்கும், இரக்கம் காட்டாத கைகேயி, மாற்றாளாயதன் சொல்லுக்கு உறுதியாகச் செவிசாய்க்க மாட்டாள் என்பது கோசலைக்கு நன்கு தெரியும். எனவே, சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/113&oldid=1496937" இலிருந்து மீள்விக்கப்பட்டது