பக்கம்:அரசியர் மூவர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 113


 தரும சங்கடம்

“சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.” (குறள்.664)

என்ற முதுமொழியாண்டும்பொய் ஆவதில்லை அல்லவா? கணவன் இத்தனை காலம் வாழ்ந்து விட்டு இறக்கப்போகும் தறுவாயில் 'சொல்லைக் காப்பாற்றாதவன்' என்ற பெயருடன் இறப்பதை அவள் விரும்பவில்லை. அவனைச் 'சொல் தவறியவன்' என்ற பழியிலிருந்து காக்க வேண்டுமாயின், அதற்கென அவள் செய்ய வேண்டிய தியாகம் எத்துணைப் பெரிது! தான் பெற்ற ஒரே மகனை இழப்பது தான் அந்தத் தியாகம். ஊரில் வாழும் மாந்தர் போல் அனைவருங்கூட, “உய்யாள் கோசலை என்று ஓயாது வெய்துயிர்ப்பார்” (1709) என்றால், பெற்ற தாயின் துயரைப் பேசவும் வேண்டுமோ! எனவே, கணவனை நோக்கி, "வருந்த வேண்டா” என்று கூறிய கோசலை, தரும சங்கடம் என்று கூறப்பெறும் இடர்ப்பாட்டில் சிக்கிக் கொள்கிறாள். அறம் எத்துணைக் கொடிது என்பதை முன்னர்த் தசரதன் அறிந்தது போல இப்பொழுது இத்தாய் அறியத் தொடங்கிவிட்டாள். ஒரு புறம் கணவனும் அவனுடைய புகழும்; மற்றொரு புறம் காதல் மைந்தன். இருவருக்கும் நன்மை தேடத் தன் உயிர் தேவைப்ப்டின், அதனை அவள் விருப்பத்தோடும் தருவாள். ஆனால், இப்பொழுதைய நிலையில் யாரானும் ஒருவரைத் துறந்துதான் மற்றவரை அடைய வேண்டும். யாரை விட்டு யாரை வேண்டுவது? கற்புடையவள் என்ற முறையில் கணவன் நலம் பெற்றால் சரி என்று நினைப்பதா, பெற்ற தாய் என்ற முறையில் மைந்தன் நலம் பெற்றால் சரி என்று நினைப்பதா? கோசலையின் நிலை மிக இரங்கத் தக்கதாகிறது கோசலை யாராவது ஒருவரைக் காத்தலே முறை என்று மற்றொருவரைத் தியாகம் செய்ய முடிவு செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் அவள் எண்ணம் முற்றுப் பெறும் என்று கூறுவதற்கில்லை. இவற்றின் இடையே நாம் சற்றும் எதிர்பாராத ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/115&oldid=1496942" இலிருந்து மீள்விக்கப்பட்டது