பக்கம்:அரசியர் மூவர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 ☐ அரசியர் மூவர்


 நிலை வருதலும் கூடுமன்றோ? இராமனும் தந்தை கட்டளையை மீறக் கூடாது என்ற கருத்தில் அடவி சென்றுவிடலாம். இராமனுடைய பிரிவுத் துயரம் தாங்காத தசரதன் இறந்துபடவும் கூடும். “வாய்த் தவிடும்போய்,அடுப்பு நெருப்பும் இழந்ததுபோல” என்பது பழமொழி. வாயில் தவிட்டைவைத்துக் கொண்டு அடுப்பில் ஊதும்போது தவிடு படுவதால் நெருப்பும் அவிய, தவிடும் போய்விடும் என்பது போல இராமனையும் உயிருடன் இழந்து தசரதனையும் இழக்கும் நிலை ஏற்படலாம். அத்தகைய கொடுமையைக் கோசலை நினைக்கவும் அஞ்சுகிறாள். ஆனால், அந்த நிலை வந்தே தீரும் என்று தோன்றுகிறது அவளுக்கு. சில சமயங்களில் சில நினைவுகளை மனத்தால் நினைக்கவும் அஞ்சுகிறோம்; ஆனால், அந்நினைவுகளை அகற்றவும் முடிவதில்லை. நினைப்பதும் பெருந்துன்பம் நினையாதிருப்பதும் இயலாக் காரியம். இது போன்ற ஒரு நிலை கோசலைக்கு உண்டாவதைக் கவிஞன் இதோ கூறுகிறான். 'மகன் போகாமல் இருக்கப் போவதுமில்லை; கணவன் இறவாமல் இருக்கப் போவதுமில்லை.' இவ்விரண்டு எண்ணங்களாலும் அலைப்புற்றாள்; கணவன் புகழ் அழிந்துவிடுமோ என்று அதற்கு அஞ்சிக்கொண்டு நின்றாள்.

“போகாது ஒழியான் என்றாள் புதல்வன் தன்னை ;
கணவன்

சாவாது ஒழியான் என்றென்று உள்ளம் தளர்வுற்று
அயர்வாள்;

காவாய் என்றாள் மகனை ; கணவன் புகழுக்கு
அழிவாள்;

ஆவா! உயர்கோ சலையாம் அன்னம் என்உற்
றனனே" (1658)


உலகத்தில் மக்களாய்ப் பிறந்தவர் அனைவர்க்கும் இன்பம் துன்பம் என்ற இரண்டும் மாறி மாறி வருதல் உண்டு. பல சமயங்களில் கடமையை நிறைவேற்றவேண்டுமானால் அது கசப்பாய் இருக்கும்._ஆனால், கடமையை நிறைவேற்றிவிட்டோம் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/116&oldid=1496800" இலிருந்து மீள்விக்கப்பட்டது