பக்கம்:அரசியர் மூவர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைய மென்கொடி ☐ 127


 முதற்சந்திப்பு

சுமித்திரையை நாம் முதன்முதல் சந்திப்பது யாகசாலை யிலாகும். அவியுணவை மனைவியர் மூவர்க்கும் தரத்தொடங்கிய தசரதன், முதலில் கோசலைக்குத் தந்தான்; எஞ்சியுள்ளதில் ஒரு பகுதியைக் கைகேயிக்குத் தந்தான்; எஞ்சியதைச் சுமித்திரைக்குத் தந்தான். இவ்வாறு அவன் தந்த முறையிலும் சுமித்திரை தான் மூன்றாம் மனைவி என்பதைப் பெற வைக்கிறான் கவிஞன். அனைவர்க்கும் தந்த பிறகும் தட்டில் உதிர்ந்து கிடந்தது ஒரு சிறு பகுதி. அதனை வயதாற் சிறியவளாய சுமித்திரைக்கே மீட்டும் தந்தான். இவ்வாறு தசரதன் இரண்டாம்முறை சுமித்திரைக்கே தந்தது சாலவும் பொருத்தம் உடையது. உண்ணும் பொருள்களில் அதிகப்படியானதை இன்றும், ஆண்டில் இளையவர்க்குத் தருதலே மரபாகும். எவ்வளவு தான் கைகேயியிடம் மன்னன் அதிகப்பற்று வைத்திருப்பினும், அதை இப்பொழுது காட்டவில்லை. ஆண்டால் இளையவள் என்ற ஒரே காரணத்திற்காகப் போலும் எஞ்சியதைக் கைகேயிக்குத் தாராமல் சுமித்திரைக்கே தந்துவிட்டான் அவன் இருமுறை சுமித்திரைக்கு அளித்ததை இதோ கவிஞன் பாடுகிறான்.

"நமித்திரர் நடுக்குறும் நல்ங்கொள் மொய்ம்புடை
நிமித்திரு மரபுளான் முன்னர் நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன்; சுரர்க்கு வேந்து, 'இனிச் சமித்ததுஎன் பகை எனத் தமரொடு ஆர்ப்பவே.
“தன்னையும் சுமித்திரை தனக்கு நல்கினான்.”
(269.270)


(பகைவர்கள் நடுங்கும்படியான பலத்தையுடைய நிமி என்னும் அரசனது மரபில் பிறந்தவனாகிய தசரதன் சுமித்திரைக்குத் தந்தான். அவன் தந்தவுடன் தேவேந்திரன், 'என்பகை அழிந்தது' என்று சுற்றத்தோடு மகிழ்ந்தான். மறுபடியும் சிதறியதைத் தசரதன் அவளுக்கே அளித்தான்.) .

இவை இரண்டு பாடல்களின் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியை அறிய முடிகிறதே தவிர, கமித்திரையைப் பற்றி ஒன்றும் அறியக் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/129&oldid=1496832" இலிருந்து மீள்விக்கப்பட்டது