பக்கம்:அரசியர் மூவர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைய மென்கொடி ☐ 129


 என்பது பற்றிக் கவிஞன் ஒன்றும் கூறாமல் விட்டுவிட்டான். இப் பொழுதும் அவள் கூற்றாக ஒன்றும் பேச்சு இன்மையின், அவள் மனத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக்குக் கிட்டவில்லை.

சீற்றம் விளையாத நிலம்

சுமித்திரையை அனைவரும் மறந்துவிட்ட நேரம். தலைநகரம் அல்லோலகல்லோலப்படுகிறது. அரசன் கைகேயி கோயிலில் மயக்கமுற்ற நிலையில் இருக்கிறான். இராமனைக் காடு செல்ல உத்தரவிட்டுவிட்டாள் கைகேயி. இராமனும் கோசலை கோயில் புகுந்து அவள் வருத்தத்திற்கு ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்டு வருகிறான். வெளியே உயிரினும் இனிய தம்பி இலக்குவன் கடுஞ் சீற்றம் உற்றவனாய்ப் போருக்குத் தயாராகிறான். சுமித்திரையின் அடக்கம் எங்கே, அவள் அருமை மைந்தன் இலக்குவன் சீற்றமும் படபடப்பும் எங்கே! நினைக்கவும் முடியவில்லை இலக்குவன் சீற்றத்தின் எல்லையை

". . . . . . . . . . . . . . . .யாவராலும்
மூட்டாத காலக் கடைத்தீஎன மூண்டு எழுந்தான்."
(1716)
அவன் நின்ற நிலை ஆதிசேடனை நினைவூட்டுகிறது.
"அண்ணல் பெரியோன் தனதுஆதியின் மூர்த்தி -
ஒத்தான்."(1717)


இலக்குவனுடைய வில்லின் நானொலி கேட்டு இராமன் ஓடோடியும் வருகிறான். தம்பியின் கோலத்தைக் காணத் தமை யனுக்கு வியப்பே மேலிடுகிறது. இலக்குவன் கைகேயி மேலும் பரதன் மேலும் தீராத சினம் கொண்டுள்ளான் என்பதை அறிந்த இராமனுக்கு ஒரு கணம் சுமித்திரை நினைவு தோன்றுகிறது. அவளுடைய அடக்கமும், அன்பும், தியாக புத்தியும் நினைவுக்கு வருகின்றன. அமைதியே வடிவான சுமித்திரை மகனா இலக்குவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/131&oldid=1496841" இலிருந்து மீள்விக்கப்பட்டது