பக்கம்:அரசியர் மூவர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைய மென்கொடி ☐ 133


 கோசலை தனக்கடுத்த கைகேயியிடம் அல்லவா அன்பு பாராட்ட வேண்டும்? மேலும், கைகேயி தானே இராமனைப் பரிவுடன் வளர்ப்பவள்? அவ்வாறிருந்தும், கோசலையின் காதல் சுமித்திரை யிடம் செல்லக் காரணம் யாது? விடை எளிதில் காணக் கூடியதே. ஆண்டால் இவர்கள் இருவரிடையேயும் வேறுபாடிருப்பினும், ஏனைய பல ஒற்றுமைகள் இலங்கக் காணலாம். அவற்றுள் தலையாய ஒன்று, இருவருமே தசரதனால் அதிகம் கவனிக்கப்படாதவர் என்பதுதான். கைகேயியிடம் அரசன் கொண்ட கழிபெருங்காதல் ஏனையோரைக் கவனியாதபடி செய்துவிட்டது. ஆண்டால் இளைய சுமித்திரையைக் கூட அவன் கவனியாமல் விட்டது வியப்பேயாகும். இந்த ஒரு காரணமே சுமித்திரையைக் கோசலைபால் செலுத்தி இருக்க வேண்டும். இருவரும் துன்புறுவது ஒரே காரணத்தாலாகலின், இருவரும் அதிகம் நெருங்கி ஒருவர் மாட்டு ஒருவர் அன்பு கொள்ளலாயினர். யாவரினும் மூத்தவளும் யாவரினும் இளையவளும் ஒன்று கூட இதைத்தவிர வேறு காரணம் காண்டல் அரிதாகும். மகிழ்ச்சி, துயரம் என்ற இரண்டையும் பகிர்ந்துகொள்ள இவ்விருவரும் ஒருவர் மற்றவரை நாடலின் உட்கருத்தும் இதுவேயாம்.

இக்காரணத்தோடல்லாமலும் சுமித்திரையின் இயற்கையான நற்பண்புகள் யாவராலும் போற்றப்பட்டன. கோசலை, இராமன் ஆகிய இருவரும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் பண்புடையவளாய்ச் சுமித்திரை இருந்ததை நன்கு அறிகிறோம். எனவே, அவள் மைந்தனாகிய இலக்குவனும் அவளுடைய நற்பண்புகளைப் பெற்றிருப்பான் என்று எதிர்பார்ப்பதிலும் தவறில்லையல்லவா? இதனை மனத்துட் கொண்டுதான் போலும் இராகவன் இலக்குவன் சீற்றத்தைப் பார்த்துக் கூறுகையில், -

“ விளையாத நிலத்து உனக்கு எங்ஙணம் விளைந்தது? என்றான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/135&oldid=1496851" இலிருந்து மீள்விக்கப்பட்டது