பக்கம்:அரசியர் மூவர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைய மென்கொடி ☐ 135


 'வருந்தற்க' என்று கூறுவது முற்றிலும் பொருத்தமானதே! ஆனால், இதனைக்கூடக் கூறுவதற்கு முன்னர் அரசனைப்பற்றிய குறிப்பு ஏன் வர வேண்டும்? அறிவிற் சிறந்த இராமன் இதை எளிதிற்கண்டு கொண்டான். அவன் தன் தாயாகிய கோசலையிடம் சென்றபொழுது அவள் ஒன்றும் அறியாதவளாய் நின்று கொண்டு அவனையே நோக்கி,

“நினைந்ததுஎன்? இடையூறு உண்டோ நெடுமுடி
புனைதற்கு? என்றாள்.” (1607)

ஆனால், தன்னைக் கண்ட மாத்திரையில் கீழ் வீழ்ந்து அழுகிறாள் சுமித்திரை என்றால், அவள் முன்னரே இது பற்றி அறிந் துள்ளாள் என்பது தானே கருத்தாகும்?

நடைபெற்ற நிகழ்ச்சி ஓரளவு கமித்திரைக்குத் தெரிந்து விட்டதென்பதை இராமன் அறிந்து கொண்டான், ஆனால், இது யாரால் நடைபெற்றது என்பதை அவள் அறிவாளா இல்லையா என்பதை அவன் அறியான். எனவே, அவள் கைகேயிமேல் ஐயப்பட்டு வீண் வருத்தம் கொள்வதைக்காட்டிலும் முதலிலேயே அவளுக்கு உண்மையை உண்ர்த்தி விடவேண்டும் என்று கருதினான். அவ் வாறாயின் உடனே அவள் வருத்தம் கணவனாகிய தசரதன் மேல் திரும்பிவிடலாமன்றோ? அதையும் இராகவன் விரும்பவில்லை. எனவே, மிகவும் ஆராய்ந்த சொற்களால் தசரதனும் வேறு வழி இல்லாமல் அகப்பட்டுக்கொண்டான் என்று கூறுவானைப் போலப் பேசுகிறான். “அரசனைப் பொய்யனாக்க'யான் விரும்பவில்லை,” என்று கூறுவதால், அரசன் முன்னரே வாக்குக் கொடுத்து அதில் அகப்பட்டுக்கொண்டான் என்ற கருத்தையும் தெரிவித்துவிட்டான். அறிவிற்சிறந்த சுமித்திரை ஒரு நொடிப் பொழுதில் இச்சொற்களின் உட்பொருளை உணர்ந்துகொண்டாள். இது தருமசங்கடமான நிலை என்பதும் அவளுக்கு விளங்கிவிட்டது. கணவன், மைந்தன் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/137&oldid=1496854" இலிருந்து மீள்விக்கப்பட்டது