பக்கம்:அரசியர் மூவர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 ☐ அரசியர் மூவர்




“பின்னும் பகர்வாள்.'மகனே! இவன்பின்செல்; தம்பி
என்னும் படியன்று; அடியா ரினின்ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன்வந் திடில்வா:அது அன்றேல்
முன்னம் முடி'என் றனள்வாள் விழிசோர நின்றாள்.”
(1752)


அரசனிடத்துக் குடிமகன் போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினால், அதனால் வரும் இடர்ப்பாட்டை உடன் கண்டு கொண்டாள் அவ்வரசி. குடிமக்கள் நலத்திற்காகத்தான் அரசன் இருக்கிறானே தவிர, அவன் நலத்திற்காகக் குடிமக்கள் இல்லையே! முற்கூறியபடி கூறிவிட்டால், இலக்குவன் நலந்தீங்குகளுக்காக இராமன் பொறுப்பாளியாக நேரிடும். எனவே, அக்கருத்தை மாற்றி அமைத்துவிட்டாள் அரசியான கமித்திரை.

'தம்பி என்று நினைத்துப் போதல் வேண்டா,' என்பதால், இலக்குவனைக் காக்கும் பொறுப்பு இராமனுக்கு இல்லையாதல் காண்க. அதே கருத்தை மேலும் வலியுறுத்தவும், கண்டதற்கெல்லாம் இராமன் கையை எதிர்பார்க்க வேண்டா என்பதை இலக்குவனுக்கு அறிவுறுத்தவும்,'அடியாரினின் ஏவல் செய்தி,' என்றாள். கொடுக்கப் பட்ட வேலையின் உயர்வு தாழ்வு கருதாமலும், அது தன்னால் இயலக் கூடியதா என்பதை ஆராயாமலும், உயிருள்ளவரை செய்து தீர்க்கும் கடப்பாடு ஏவலாளர்க்கே உண்டு. அதேபோல், இலக்குவன் நினைந்து வாழவேண்டும் என்பதற்காகவே இதனைக் கூறினாள் சுமித்திரை. குடிமகன்போல நடந்துகொள்' என்று கூறும்பொழுதே இவ்வாறு ஆணை வழி நடத்தல் வேண்டும் என்ற குறிப்பும் பெறப்பட்டதேயாயினும், அதனால் வரும் இடையூற்றை அழகான முறையில் நீக்கிவிட்டது அறிந்து மகிழ்தற்குரியது. இனி அடியானுக்கும் ஆண்டானுக்கும் உள்ள தொடர்பையும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். குடிமகன் கடமையைச் செய்துகொண்டு கூட மன்னனிடத்தில் அன்பில்லாதவனாய் இருக்கலாம். மன்னனிடம் பகைமை பாராட்டாமலும் அன்பு பாராட்டாமலும் இருந்துவிட்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/142&oldid=1496868" இலிருந்து மீள்விக்கப்பட்டது