பக்கம்:அரசியர் மூவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை ☐ 27

 தாகவே தெரியவில்லை. இராமனுக்கு மறுநாள் முடி சூட்டப் போகிறார்கள் என்ற உண்மையைக் கைகேயிக்கு முதல் முதல் அறிவித்தவள் கூனியே. இதைக் கேட்டதும் கேகயன் மடந்தையின் மனம் மகிழ்ச்சியால் எக்களிக்கிறது. உடனே இந்த நல்ல செய்தியைக் கூறியதற்காக மந்தரைக்கு 'நாயகம் அணையதோர்’ நவரத்தின மாலை நல்கினாளாம்.

புது முறை எதிர்ப்பு

அந்த மாலையை எடுத்துத் தரையில் வீசி எறிந்துவிட்டுக் கூனி, பாட்டன் வீட்டுக்குச் சென்றுள்ள பரதனை நினைத்து ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டாள். இதனாலும் கைகேயியின் மனத்தை மாற்ற முடியாது என்பதைக் கண்ட கூனி, உடனே தனது சூழ்ச்சியை மாற்றிக்கொள்கிறாள். நேரே கைகேயியை நோக்கிப் பேசத் தொடங்கி, அப்பெண்ணரசியின் அகங்காரத்தைக் கிளறிவிடுகிறாள்.

“அரசரில் பிறந்துபின் அரச ரில்வளர்ந்து
அரசரில் புகுந்துபேரரசி யானநீ
கரைசெயற்கு அருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்
உரைசெயக் கேட்கிலை! உணர்தி யோ? என்றாள்.”

(1467)

இவ்வாறு கூனி கூறுவதன் நோக்கம் யாது? தான் பிறந்து வளர்ந்த இடம் அரச குடும்பம் என்பதையும் புகுந்த இடம் பேரரசன் வீடு என்பதையும் கைகேயி அறியாதவளா? அப்படி இருக்க, இவற்றைக் கூறுவதால் யாது பயன்? அரசர் வீட்டிலேயே எப்பொழுதும் ஏவல் செய்து பழகிய கூனிக்குச் சில உண்மைகள் தெரியும். அதாவது, ஒரு பெரிய அரசனுடைய வாழ்வில் அவன் கண் எதிரிலேயே அவன் அறியாதபடி பல சூழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. இதனை அவன் கவனித்துப் பரிகரிக்காவிடின், பெருந்தீங்காய் முடிவதுண்டு. தான் காண்பன அனைத்தையுமே. நம்பிக்கொண்டு ஓர் அரசன் அமைதியுடன் வாழ்வானேயாகில், அவன் நிலை வருந்தத்தக்கதாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/29&oldid=1495641" இலிருந்து மீள்விக்கப்பட்டது