பக்கம்:அரசியர் மூவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 0 அரசியர் மூவர்

“ஒன்றாய் நின்ற ஆருயிரோடும் உயிர்கேள்வர்

பொன்றா முன்னம் பொன்றினர் என்னும் புகழ்அல்லால்

இன்றோர் காறும் எல்வளை யார்தம் இறையோரைக்

கொன்றார் இல்லை; கொல்லுதி யோநீ? கொடியாளே” (1531)

“நா அம்பால்என் ஆர்உயிர் உண்டாய்” (1532)

“விண்னோர் காறும் வென்ற எனக்குஎன் மனைவாழும்

பெண்ணால் வந்தது அந்தரம் என்னைப்

பெறுகேனோ?”(1534)

என்று வரும் அடிகள் அம்மன்னனே அவள் வரத்தால் விளையப் போகும் கேட்டைப்பற்றிக் கூறியதை அறிவிக்கின்றன. இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தும் ஒருத்தி மனங் கலங்க வில்லை எனில், அவளை எவ்வாறு பெண் என்று கூறுவது?

உரங்கொள் மனத்தவள்

தசரதன் கூறிய இத்துணை அடைக்கல அரற்றல்களுக்கும் அவள் செவி சாய்க்கவில்லை என்பது மட்டும் அன்றி, மேலும் அவனைத் துன்புறுத்தவே தொடங்குகிறாள். தன்னை மறந்த நிலையில் அவன் தரையில் விழுந்து புரள்கின்ற அந்த நேரத்தில் சிறிதும் கருணை காட்டாமல், அவள், “இவ்வரங்களை இப்பொழுது தரப் போகிறீரா? அல்லாவிடின் யான் உயிரை விடட்டுமா?’ என்கிறாள்.

“ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென்.” என்றும்,

“அரிந்தான் முன்ஒர் மன்னவன் அன்றே அருமேனி

வரிந்தார் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம்நல்கிப்

பரிந்தால் என்னை? என்றனள் பாயும் கனலேபோல்

எரிந்துன றாதே இன்னுயிர் உண்ணும் எரியன்னாள்.”(1536,1537)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/48&oldid=1496971" இலிருந்து மீள்விக்கப்பட்டது