பக்கம்:அரசியர் மூவர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை 47

 என்றும் கூறும் மனநிலை, எல்லாப் பெண்களுக்கும் வரக் கூடிய ஒன்றன்று. -

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.” (56)

என்ற குறளுக்கு முற்றும் எதிராக நடக்கத் தொடங்கிவிட்டாள் கைகேயி. இந்நிலையில் அரசன் யாது செய்வான்!

“வீந்தாளே இவ் வெய்யவள், என்னா மிடல்வேந்தன்,

'ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என்சேய் வனமாள

மாய்ந்தே நான்போய் வான்அரசு ஆள்வன், வசை வெள்ளம்

நீந்தாய் நீந்தாய் நின்மகனோடு நெடிது, என்றான்.”

“ஊறா நின்ற சிந்தையி னாளும் துயில்வுற்றாள். (1538,1539)

அரசன் வரத்தைத் தந்தேன், என்று கூறினவுடன் அவள் உறங்கிவிட்டாள். என்னே அவள் நெஞ்சின் உறுதி இருந்தவாறு எத்துணைக் கொடுமை படைத்த நெஞ்சினளாய் இருப்பினும், அரசன் படும் பாட்டைப் பார்த்து எவ்வாறு கவலையற்று இருக்க முடியும்? அதனினும் மேலாக, எவ்வாறு உறங்க முடியும்?

தீர்ந்த கொலையாளருங்கூடத் தம்மால் அன்பு செய்யப்பட்டா ரிடத்தும், தமக்கு வேண்டியவர்களிடத்தும் அன்பு பாராட்டுகின்றனர் என்று கூறுவார்களே இயற்கையிலேயே இத்தகைய மனப் பண்பு உடையவர் அல்லளே இவள் சேர்க்கையால் வந்த குணக்கேடா? ஆம்: மந்தரை கூறிய சொற்களால் மனந்திரிந்துவிட்டாள் என்றால், இவ்வளவு எதிர்ப்பையும் தாங்கிநிற்கக் கூடிய பண்பாட்டையாண்டுப் பெற்றாள் இவள்? இது ஒரு புதிராகவே இருக்கிறது. எனவே, முற் கூறியபடி மூன்று குற்றங்களை இழைத்துவிட்டாள் இம்மாதரசி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/49&oldid=1496976" இலிருந்து மீள்விக்கப்பட்டது