பக்கம்:அரசியர் மூவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று கூறும் பொழுது தாய்மீது குற்றஞ்சாட்டுவது வெளிப்படை இப்பொழுது வெளிப்படையாகவே கைகேயி,

“வாக்கினால் வரந்தரக் கொண்டு மைந்தனைப்
போக்கினேன் வனத்திடை ; போக்கிப் பார்உனக்க
ஆக்கினேன்; அவன்.அது பொறுக்க லாமையால்
நீக்கினான் தன்னுயிர் நேமி வேந்து, என்றாள்.” (2166)

இப்பாடலில் அவள் இராமனைப்பற்றி மைந்தனை என்றும், பரதனைப்பற்றி உனக்கு என்றும் கூறுதல் அறிதற்குரியது. இராமன், பரதன் என்ற இருவருமே அவளுடைய செயலை அறிந்தவர்களே. நெஞ்சு அறிந்து அவள் இராமனுக்குத் தீமை புரிந்தாள். பரதனுக்கு நன்மை புரிய வேண்டும் என்று வரம் கொண்டது ஒன்று. ஆனால், அதற்காக இராமனைக் காட்டிற்கு அனுப்பியிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு இருந்தும், அவளால் கொடுமை செய்யப்பட்டவனான இராமன் சிறிதும் அவள்பால் வருத்தம் கொள்ளவில்லை; அதற்கு மறுதலையாகப் பணிவுடனும் அன்புடனும்'எந்தையே ஏவ, நீரே அருள் செய, (1600) என்றும் மன்னவன் பணியன்று ஆகில் நும்பணி மறுப்பனோ? (1604) என்றும் கூறிவிட்டுக்காடு சென்றுவிட்டான். ஆனால், யாருக்காகக் கைகேயி இத்தனை பாடுகளும் பட்டாளோ, அந்தப் பரதன் இப்பொழுது அவளைக் கொன்று விடுகிறேன். என்கிறான். இதைவிட அவள் மனத்தை ஒடிக்கக்கூடியசெயல்வேறு யாது? எனவே, காடு சென்றவனும் தன்னால் தீங்கிழைக்கப் பெற்றவனும் ஆன இராமனையும், வீட்டில் இருப்பவனும் தன்னால் முடிவாங்கித் தரப்பட்டவனும் ஆனபரதனையும் அவள் ஒப்பிட்டு பார்க்கிறாள். பழைய மனநிலையை அடைந்தவளாய், இராமனை மீட்டும் தன் மைந்தன் என்று பேககிறாள். தசரதனிடம் அஞ்சாமல் “உரங்கொள்மனத்துடன்” வரங்கேட்டகைகேயி, இப்பொழுதுதான் பெற்ற பிள்ளையிடம் அஞ்சுவதைக் காண்கிறோம். ஏன்? தசரதன் தானும் ஒரு தீமை அவளுக்குப் புரிந்துவிட்டானாகலின், அவளை எதிர்த்துப் போராட அவனால் இயலவில்லை. அவளும் அவன் எதிரே-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/52&oldid=1495849" இலிருந்து மீள்விக்கப்பட்டது