பக்கம்:அரசியர் மூவர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நேரம் முன்னர் வரை அவளை ஆட்கொண்டிருந்தது. இதன் முடிவில் கைகேயி ஒரு முடிவிற்கு வந்துவிடுகிறாள். செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் நீங்கிச் செய்தேயாக வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறாள். இங்கே ஒரு பிரச்சனை. அவளுடைய உடல்வாகு, மென்மைத்தன்மை, அருள் நிரம்பிய மனம் ஆகிய அனைத்தும் அவளுடைய இயல்பான தன்மைகளாகும். அவற்றின் எதிராக அவள் முடிவை நிறைவேற்ற வேண்டுமானால் வலிமை பொருந்திய உடலும், மென்மைக்கு மாறுபட்ட கடினமான உறுதிப்பாடும், அருளை மறந்து கருமமே கண்ணாகி இருக்கும் கரந்த உள்ளமும் வேண்டும். தசரதனிடம் வரம் பெற்றுப் பரதனை அரசனாக்கி இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால், அது உடல் திண்மையும் உறுதி கொண்ட கண்ணும் அருளை மறைத்து வன்கண்மையோடு நடந்து கொள்ளும் ஒரு பாத்திரமாக அவள் மாறவேண்டும். மயில் போன்ற சாயலையுடைய கைகேயி இந்த வன்கண்மையுடைய பாத்திரத்தை ஏற்று நடிக்கவேண்டும். அதனைத்தான் கவிஞன் நாடக மயில் என்ற சொல்லால் குறிப்பிடுகிறான். நடைபெறப் போகும் நாடகத்தில் மயில் போன்ற சாயலையுடைய கைகேயி வன்கண்மை நிறைந்த ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு நடிக்க முடிவு செய்து விட்டாள்.

அப்படியானால் நான்காம் அடியில் தவ்வையாம் எனக்கிடந்தனள் கேகயன் தனையை என்று கூறுவதன் நோக்கம் என்ன? நவ்வி என்றும் மயில் என்றும் உருவகித்த கவிஞன் நான்காவது அடியில் மூதேவி என்று அவளைக் குறிப்பதன் நோக்கமென்ன? அவள் வடிவத்தை முதலடியில் வருணித்து விட்டு அவள் மனக்கருத்தை நினைந்தவுடன் வெறுப்பு மிகுந்தவனாய்த்தவ்வை என்று ஏசுகிறான் என்று இந்த ஆசிரியனே ஒரு காலத்தில் நினைத்த துண்டு. அவ்வாறே அன்று எழுதப்பெற்ற கேகயன் மடந்தை என்ற முன்னுள்ள கட்டுரையில் எழுதியும் உள்ளான். ஆனால், இன்று கம்பன் பாடல்களில் மரபைத் தவிர்த்துப் புதிய நோக்கில் பார்வையைச், செலுத்தியதால் இவ்வாறு புதுப்பொருள் காண முடிகின்றது. நான்கா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/57&oldid=1495851" இலிருந்து மீள்விக்கப்பட்டது