பக்கம்:அரசியர் மூவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வது அடியிலுள்ள மூதேவி என்ற சொல் நிச்சயமாகக் கைகேயியைக் குறிக்கவில்லை. அவள் மேற்கொண்ட வேடத்தை நினைக்கின்றான் கவிஞன். அந்த வேடத்தின் பால் கொண்ட வெறுப்புக் காரணமாக மூதேவி என்று பேசுகிறான். மூதேவி என்று நேரடியாகக் கூறாமல் மூதேவி கிடந்ததுபோல என்று கூறுகிறான். முதலடியிலிருந்த நவ்வியும் மயிலும், வேடத்தை மேற்கோண்ட வேடதாரியைக் குறிக்கும். நான்காவது அடியிலுள்ள தவ்வை, வேடதாரி மேற்கொண்ட வேடத்தைக் குறிக்கும்.

இவ்வாறு பொருள் செய்தற்கு இப்பாடல் இடந்தருமா? என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றலாம். வரங்கள் கேட்டு முடிந்த பின்னர் எந்த நிலையிலும் தன் மனத்தை அவள் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்ற பகுதியை விளக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கைகேயி தனக்கு இயல்பாக உள்ள அருளைத் துறந்து விட்டாள் என்று கூற வருகிறான் கவிஞன். துறப்பதற்குக் காரணம் கூற வந்தவன் அரக்கர் பாவம், அல்லவர் இயற்றிய அறம் என்ற இரண்டுமே அவள் இவ்வேடத்தை மேற்கொள்ளக் காரணமாயின என்று கூறுகிறான். வேடம் போட்டுக்கொண்ட பிறகு அவள் பேசிய சொற்களுக்கு அவளைக் குறை சொல்லிப்பயனில்லை. வேடமணிந்தவர் நாடகத்தில் பேசும் சொற்களுக்கு அவர் பொறுப்பல்லர். இதை மனத்தில் கொண்ட கவிஞன் இரண்டு அற்புதமான சொற்களை இங்கே பெய்கின்றான். ஒருத்தி நல்லருளைத் துறந்துவிட்டாள் என்று கூறிய பிறகு அவள் பேசிய சொற்களைத் துரமொழி என்று கூறுவது எவ்வாறு? ஆனால் கவிஞன் அவ்வாறு தானே கூறுகிறான். நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான் என்பவை, கவிஞன் கூற்றாகும். எனவே நல்லருள் துறந்தாள் என்று அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்று நம்மை எச்சரிப்பவன் போலக் கவிஞன் பேக்கிறான்.

இரண்டு வரங்கள் வேண்டும் என்று கேட்டதும் அவற்றுள் ஒன்றால் பரதனுக்கு நாட்டைப் பெற்றதும், மற்றொன்றால் சீதைகேள்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/58&oldid=1495852" இலிருந்து மீள்விக்கப்பட்டது