பக்கம்:அரசியர் மூவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வனை வனமாளச் செலுத்தியதும், தசரத்ன் எவ்வளவு வேண்டியும் விட்டுக் கொடுக்காமல் இருந்ததும் எவ்வாறு துரமொழியாகும். சொல்லளவில் இவை கொடுஞ்சொற்கள்தான். அவற்றால் விளைந்த பயன் இரண்டாகும். ஒரு பயன் தசரதனைப் பொய்யற்றவனாக ஆக்கிற்று. மற்றது காப்பியம் நடைபெற ஒரு வழியைத் தந்தது. இவ்விரண்டு நற்பயன்களையும் தீமொழிகள் நிச்சயமாகத் தரவியலாதுஎனவேதான் அவன் சொற்களைப் படிப்பவர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று எச்சரிப்பவன் போல துமொழி மடமான் என்று பேசுகிறான்.

'கன்யா கல்க வரலாற்றைக் கம்பன் வெளிப்படையாகப் பேசவில்லை என்பது உண்மைதான். மூலநூலாகிய வால்மீகத்தில் இச்செய்தியை இராமன் வனத்திற்கு வ்ந்த் பரதனிடம் விரிவாகப் பேசுவதாக அமைந்துள்ளது. அதை விளக்கமாகக் கூறிவிட்டால் கைகேயியின் மேலுள்ள பழிநீங்கும். ஆனால் அவள் கணவனாகிய தசரதன் மேல் வாக்கை மறைத்துச் சூழ்ச்சி செய்து இராமனுக்குப் பட்டம் தர முயன்றவன் என்ற பழி நீங்காது நிலைத்துவிடும். இதனாலேயே கைகேயி மேற்கொண்ட நாடகப் பாத்திரச் செயல் களை கம்பன் விரிவாகப் பேசுகிறான்.

கைகேயியின் செயல்கள் நாம் நினைப்பது போலக் கொடிய செயல்கள் அல்ல என்றும் கணவனைக் காப்பாற்ற வேண்டி அவள் போட்டுக்கொண்ட வேடமும் அவ்வேடத்திற்கேற்ற சொற்களுமே யாகும் என்றும் இதுவரை கூறிவந்தோம். கம்பன் 'துமொழி மடமான் என்றும் நவ்வி என்றும் நாட்க மயில் என்றும் அவளைக் குறிப்பதைக் கண்டோம். கன்யா சுல்கக் கதையை மறைப்பதன் மூலம் இரண்டு பெரிய காரியங்களைக் கவிஞன் சாதித்து விடுகிறான். ஒன்று தசரதனை வாய்மையும் மரபும் காத்த மன்னவனாக்கி விடுகிறான். இரண்டாவது கொடுமையானவள், தீயவள், கணவனுக்கும் மகனுக்கும் கேடு சூழ்ந்தவள் என்றெல்லாம் கருதப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/59&oldid=1495854" இலிருந்து மீள்விக்கப்பட்டது