பக்கம்:அரசியர் மூவர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாடக மயில் ☐ 59

 பறவைக் கூட்டங்கள் அவளை நஞ்சு என்றும் கயத்தி என்றும் ஏசியதாகப் பாடலை அமைக்கவில்லை. 'விடத்தை, கயத்தியை வைவன போன்றவே' என்று இரண்டாம் வேற்றுமை கொடுத்துப் பேசுவதால் இவை இரண்டும் கவிஞன் கூற்றேயாகும்.

நாடக மயில் என்று படலத்தின் தொடக்கத்தில் அவளைப் பேசிய கவிஞன் இப்பகுதியில் அவளை நஞ்சு என்றும் கயத்தி என்றும் ஏசுவது சரியா என்ற வினா தோன்றினால் அது நியாயமானதே யாகும். கவிஞன் இப்பொழுது தன் மனத்தில் தோன்றிய சினத்தை, வெறுப்பை வெளியிடுவதற்கு இவ்விரண்டு சொற்களையும் பயன்படுத்துகிறான். இது சரியா என்ற வினாவை எழுப்பும் முன் கலைஞர்களின் ஒரு மனநிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் காட்டப்பெறும் உதாரணம் இந்நிலையை நன்கு விளக்கும். இந்தக் காட்சியில் கல்விக்கடலான சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் நாடகக் கலைஞர், நாடக ஆசிரியர், இயக்குநர் ஆகிய முத்தொழிலையும் புரிபவர் கிரீஷ் சந்திர கோஷ் என்ற கலைஞர் ஆவார். அதே காலத்தில் வாழ்ந்த உலகம் போற்றும் மாபெரும் அறிஞர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆவார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை'தீனபந்துமித்ரா' எழுதிய'நீல்தர்ப்பண்' என்ற நாடகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சாயத் தொழிலுக்கு இன்றி யமையாத அவுரிச் செடியைப் பயிரிடும் தொழிலாளர்களை ஆங் கிலேய முதலாளிமார்கள் கொடுமையாக நடத்தி சித்திரவதை செய்யும் செயலை இந்நாடகம் கருப்பொருளாகக் கொண்டது. நாடகத்தில் கொடுமை புரியும் ஆங்கில முதலாளியாக கிரீஷ் சந்திர கோஷ் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தத்ரூபமாக நடிக்கும் அவருடைய நடிப்பை பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் கல்விமானாகிய வித்தியாசாகர் ஒரு காரியத்தைச் செய்து விட்டார். நடைபெறுவது நாடகம் தான் என்பதையும், இக்கொடுமைக்காரன் வேஷம் தரித்தவர் தன் அருமை நண்பராகிய கிரீஷ் சந்திர கோஷ் என்பதையும் முழுவதுமாக மறந்து விட்டார் வித்யாசாகர். கொடுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/61&oldid=1496705" இலிருந்து மீள்விக்கப்பட்டது