பக்கம்:அரசியர் மூவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 அரசியர் மூவர்


இருந்துவிட்டான். கைகேயிமாட்டுக்கொண்ட காழ்ப்புணர்ச்சியும், பரதன்மாட்டுக் கொண்ட கசப்புணர்ச்சியும் அவனுடைய மனத்தில் நிறைந்திருந்த காரணத்தால்தான் அவன் வீடுபேற்றை அடைதல் முடியவில்லை. ஆகவே, இந்தக் காழ்ப்புணர்ச்சி அவனிடமிருந்து நீங்கினாலொழிய அவன் வீடுபேற்றை அடைய முடியாது என்ற இந்த நாட்டுக் கொள்கையை வலியுறுத்துவதற்காக, மூல நூலில் இல்லாத ஒரு பகுதியைப் புகுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். அனைத்தும் முடிந்து வெற்றிவாகை சூடிய இராமனிடம் தசரதன் வருவதாக ஒரு புதிய காட்சியை உண்டாக்குகின்றான். தசரதன் வந்து.

"அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
 இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது.என்னைக்கொன்று
நீங்கலது. இப்பொழுது அகன்றது உன் குலப்பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்த மா மணி இன்று வாங்க” (1006B)

என்று சொல்லி, நீ வரத்தைக் கேள்' என்று சொல்லுகின்றான். அப்போது இராமன் கேட்கின்ற வரம் வியப்பை உண்டாக்குவதாக அமைகின்றது. ஐயா,

"

தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக" (10079) (10079)

என்று கேட்கின்றான்.

“தீயள் என்று நீ துறந்த என்தெய்வமும்”

என்ற வார்த்தைகள் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியன. தெய்வத்தைப் போல, தன்னுடைய நலத்தைக் கருதாமல், பிறருக்காகவே மாபெரும் காரியத்தைச் செய்தவள் கைகேயி என்பதை இராகவன் உணர்ந்த காரணத்தால்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/70&oldid=1496562" இலிருந்து மீள்விக்கப்பட்டது