பக்கம்:அரசியர் மூவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடக மயில் ☐ 69


“என் தெய்வம்”

என்று பேசுகின்றான்.

அந்தத் தெய்வத்தை உள்ளவாறு உணராமல் ஏசி, காழ்ப்புணர்ச்சியோடு இறந்துவிட்ட காரணத்தால், தசரதனைச் கட்டிக் காட்டுபவன் போல,

“தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக" (10079)

என்று கேட்பதன் மூலம், கைகேயி என்ற பாத்திரத்தைக் கவிச் சக்கரவர்த்தி என்ன அடிப்படையில் படைத்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. -

இராகவனைப் பொறுத்தமட்டில் கைகேயின் தியாகத்தை நன்கு அறிந்திருந்தான்; ஆதலால் அவளைத் தெய்வம் என்று கூறுகின்றான். அந்தத் தெய்வம் தன்னுடைய கடமையை நிறை வேற்றுகின்ற முறையில் பேசவேண்டியபொழுது பேசிற்று. கொண்ட கொள்கையில் உறுதிப்பாட்டோடு இருந்து கொள்கையை நிறைவேற்றும்பொழுது தனக்கு வருகின்ற பழி பாவம் முதலிய அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது. எந்தச் சூழ்நிலையிலும் வாய் திறந்து பேசி தன்னுடைய பழியைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று அந்தப் பாத்திரம் கருதவே இல்லை. அதற்குரிய சந்தர்ப்பங்கள் பலமுறை கிடைத்தும் வாய் திறவாமல் இருந்துவிட்ட ஒரே காரணத்தால் இறுதி வரையில் தன்னுடைய கணவனை மாசு மருவு அற்றவனாக ஆக்க வேண்டுமென்ற தன்னுடைய குறிக் கோளில் வெற்றி பெற்றவளாக ஆகி விடுகின்றாள் கைகேயி. ஆகவேதான், ஏனையோர் யாருக்கும் தராத அந்தப்பட்டத்தை, இராகவன் கூற்றாகவே அமைக்கின்றான் கவிச்சக்கரவர்த்தி, “என் தெய்வம்” என்று.

ஆகவே, கைகேயி என்ற பாத்திரப் படைப்பை எந்த அளவுக்குக் கவிஞன் புதிய முறையிலே படைத்திருக்கின்றான் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/71&oldid=1496708" இலிருந்து மீள்விக்கப்பட்டது