பக்கம்:அரசியர் மூவர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 81


மனத்தை அறிதல் இயலாது,” என்று கூறுகிறார்களே! காப்பியத்தில் காணப்பெறும் பெண்கள், உலகில் காணப்படும் பெண்கள் பற்றிக் கூறப்படும் இப்பழமொழிக்கு விலக்கா? உலகில் காணப்படாத பெண்களைப் பற்றியா காப்பியம் பேசுகிறது? இல்லை. காப்பியம் கற்றவர் அனைவருக்கும் இவ்வுண்மை நன்கு தெரியும். வாழ்க்கையில் காணப்பெறும் பண்பாடுகளுடன் பாத்திரங்கள் படைக்கப் பட்டாற்றான் அவை நம் மனத்தைக் கவரும். பெரும்பான்மையான காப்பியங்கள் நம் மனத்தைக் கவர்கின்றன. அவ்வாறாயின், அவற்றில் காணப்பெறும் பாத்திரங்களும் உலகியலில் காண்பவையாக அமைதல் வேண்டும். இதிலிருந்து ஒன்றை அறியலாம். காப்பியம் பாடும் புலவன் நாம் காணமுடியாதவற்றைக் காணும் இயல்புடையவன். எந்தப் பெண் மனத்தை நாம் காணமுடியாது என்று கூறுகிறோமோ, அந்தப் பெண் மனம் அவனைப்பொறுத்த வரை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குகிறது. ஆதலின், கவிஞன் சாதாரண மக்களினும் வேறுபட்டவன் என்பது வெளிப்படை.

பெண் மனம்

பெண் மனத்தைக் கூறுவதிலும் பல வகைகள் உண்டு. ஆண் களுக்கும். பெண்களுக்கும் பொதுவான சில பண்புகள் உண்டல் லவா? அவற்றைப் பற்றிக் கவிஞன் கூறுதல் எளிது என்று நினைக்கலாம். பசி, நீர் வேட்கை போன்றவை கூட இருவருக்கும் பொது எனினும், ஆண், பெண் இருவரும் இவற்றிற்கு வெவ்வேறு முறையில் எதிர் நடப்பர். எனவே, கவிஞன் இருவர் மன நிலையையும் தனித் தனியாக ஆய்ந்துதான் கூற வேண்டும். 'அனைவருக்கும் பொதுவான ஒன்பது சுவைகளில், பெண் மனம் எவ்வாறு ஈடுபடுகிறது? அவற்றை எவ்வாறு அனுபவித்துப் பிரதிபலிக்கிறது?’ என்று கூறுவதே சற்று வியப்பைத் தரும் ஒரு செயல் காதல் என்ற சுவையை எடுத்துக் கொண்டாற்கூட, ஆணும் பெண்ணும் வெவ்வேறு வகையில் இதில் ஈடுபடுகின்றனர். எனவே, கவிஞன் தொழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/83&oldid=1496758" இலிருந்து மீள்விக்கப்பட்டது