பக்கம்:அரசியர் மூவர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 ☐ அரசியர் மூவர்


தொல்லை தருவதாகி விடுகிறது. ஓரளவு தன் ஆண் அனுபவத்தை வைத்துக்கொண்டு கவிஞன் இதனைப் பெண் அனுபவமாக மாற்றிக் கூறுகிறான் என்று கூறினாலும் தவறு இல்லை. ஆனால், ஆண் மகன் என்றும் அனுபவிக்காததும் அனுபவிக்க முடியாததுமான சில அனுபவங்கள் உண்டு அல்லவா? அவற்றைக் கவிஞன் எவ்வாறு கூற முடிகிறது? உதாரணமாகக் கணவனை இழந்த காதலியின் மனத்தை எவ்வாறு ஒர் ஆண் மகன் அறிதல் கூடும்? “பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறாப் பேதை அறிவாளோ?” என்று தாயுமானவ அடிகளே அருளியிருக்கின்றாரே! பிள்ளைப்பேறு இல்லாத பெண்ணுக்குக்கூடப் பிள்ளை பெற்றவளின் மனநிலையை அறிதல் கூடாதாம்! என்றாலும், பிள்ளை பெற்ற தாயின் மனநிலையைக் கவிஞன் கூறாமலா இருக்கிறான்? கூறுகிறான்; அழகாகவும், மெய்ம்மையுடனும் கூறுகிறான். பிள்ளை பெற்ற தாய்மார்களும் அதனைப் படித்துவிட்டு, இவ்வனுபவம் மெய்ம்மையானது,' என்று கூறக் கேட்கிறோம். இது எவ்வாறு இயன்றது? “கவிஞன் ஒரு தனிப் பிறவி,” என்று முன்னர்க் கூறியதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பாடல்களில் நூற்றுக்கு எண்பத்தைந்து அகத்துறைப் பாடல்களே. அவற்றுள்ளும் பெண் மனத்தைப் பாடியனவே ஏறத்தாழ அனைத்தும் என்றும் கூறிவிடலாம். அவற்றைப் பாடியவருள் நூற்றுக்குத் தொண்ணுற்றெட்டுப் பேர் ஆடவரே. ஆடவர் பெண்டிரின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர்; அதுவும் தாம் கண்டவாறு அன்று பெண்களே சரி என்று ஏற்றுக் கொள்ளும் முறையில் அப்பாடல்கள் அமைந்துள்ளன என்றால், இது வியப்பு அல்லவா?

காப்பியத் தலைவன்

இாாமயணக் காப்பியத் தலைவனாகிய இராமனைப் பெறா விட்டாலும், வளர்த்த தாயாகிய கைகேயியின் மனநிலையைக் கவிஞன் கூறிய அழகை முன்னர்க் கண்டோம். இனி அக்கைகேயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/84&oldid=1496759" இலிருந்து மீள்விக்கப்பட்டது