பக்கம்:அரசியர் மூவர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 83


யின் மாற்றாளும் இராமனைப் பெற்றவளும் ஆகிய கோசலையைச் சற்றுக் காண்போம் :

தசரதன் தேவியர்களுள் கோசலையே மூத்தவள். “மூன்றுலகும் ஈன்றானை முன் ஈன்றானைப் பெற்ற"பெரும்பேறு உடையவள்; "கோக்கள் வைகும் முற்றத்தான் (தசரதன்) முதல் தேவி” (2366) என்றெல்லாம் பரதனால் பாராட்டப்படுபவள். “ஆற்றல் சால் கோசலை” (1457) என்று காப்பிய ஆசிரியனே அவளுக்கு அடைமொழி தருகிறான். அவள் தசரதன் உட்பட அனைவராலும் நன்கு மதிக்கப் பெறுபவள்; இராமனைப் பெறும் பேறும் இராமனையும் விஞ்சிய நற்பண்புகள் உடையவனாகிய பரதனை வளர்க்கும் பேறும் உடையவள். கைகேயியின் மகனாய்ப் பிறந்தும் அவளுடைய தீய பண்புகளுள் ஒன்றும் இன்றிச் சிறந்தவன் என்ற பெயரைப் பரதன் எடுத்தான் அன்றோ? “ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா” (2337) என்று குகனாலும் பாராட்டப்படும் பண்பாடு பரதனுக்கு எங்கிருந்து வந்தது? கோசலையிடமே முற்றிலும் வளர்ந்தவனாகலின், அவன் நற்பண்புகட்கு அவள் பெருங்காரணம் என்றால், அதனை மறுக்க இயலாது. அறிவுடைய தாய் என்பதற்கேற்ப, அவளே பரதனைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள். இராமன் அவளைக் கண்டு, “நின் காதல் திருமகன் பங்கமில் குணத்து எம்பி பரதனே துங்க மாமுடி சூடுகின்றான்." (1608) என்று கூறியபொழுதுகோசலை அதுபற்றி வருந்துவதாகவே தெரியவில்லை. அதற்கு மறுதலையாக, “நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்” ( 1609) என்றே கூறுகிறாள். இவ்வாறு மாற்றாள் மகனைத் தன் மகனாகவே கருதும் இயல்பு எளிதில் வருவதொன்று அன்று. அவ்வாறு கருதுவதிலும் கோசலை அன்பு தனிப்பட்டது. சாதாரண நிலையில் இவ்வாறு கருதுவதிலும், அக்குழந்தை இடத்து அன்பு பாராட்டுவதிலும் வியப்பு ஒன்றும் இல்லை. தனக்கும், தன்னால் அன்பு செய்யப்பட்டவர்கட்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/85&oldid=1496762" இலிருந்து மீள்விக்கப்பட்டது