பக்கம்:அரசியர் மூவர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 87


 மாக நடந்து நடந்து அலுத்த நிலையில் இருக்கிறாள். 'அருமை மைந்தன் வரும், வரும்' என எதிர் பார்த்து நிற்கின்றது தாயுள்ளம். நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. முடிசூட்டலின் முன்னரே மைந்தன் தன்னைக் கண்டு செல்வான் என்று எதிர்பார்த்து நின்றாள் அப்பெற்றெடுத்த தாய். ஆனால், முடி சூட்டலுக்கு வகுத்த நேரம் நெருங்கி விட்டது. இனித் தன்பால் வந்துவிட்டு பின் முடி சூட்டலுக்குச் செல்லக்கூட நேரம் இல்லை என்பதை உணர்ந்தவுடன் அத்தாய் மனம் வேறுவழியில் அமைதி அடைய முயல்கிறது. வேறு யாராய் இருப்பினும், 'தாயை இப்பொழுது மறந்துவிட்டான் போலும்' என்று கூட நினைக்கலாம். ஆனால், இராமன் அத்தகைய மைந்தன் அல்லனே! எனவே, வாராமைக்குக் காரணந்தேடி நற்றாய், தடுக்க முடியாத காரணத்தாற்றான் முடிசூட்டலுக்கு முன்னர் அவன் வரவில்லை என்பதை நினைந்து அமைதி அடைந்துவிட்டாள் கோசலை. ஆனால், யாருக்காகவும் நில்லாத கால தேவன் ஒடிக் கொண்டே இருக்கிறான். இதோ இந்நேரம் முடி சூட்டல் நிகழ்ந்திருக்கும்! இனி அருமை மகன் வந்து விடுவான்! இனி வரப்போகும் அவன் எவ்வாறு காட்சி அளிப்பான்? குழந்தைப் பருவத்தில் இருந்த இராமன் அவள் மனக்கண் முன் தோன்றுகிறான்.

குழந்தைகள்

குழந்தை இல்லாதவர்கள் வீட்டில் நீண்ட நாட்களுக்குப் பின் தோன்றும் குழந்தைகளை வளர்ப்பதே ஒரு தனிமுறையாய் இருக்கும். எல்லையற்ற செல்வாக்குடன் கட்டுப்பாடுகள் எவையும் இன்றிக் குழந்தைகள் வளர்க்கப்படுதல் கண்கூடு அதிலும், அக்குழந்தையின் பெற்றோர்கள் பணக்காரர்களாகவும் இருந்துவிட்டால், கேட்க வேண்டுவதில்லை. வேளைக்கு ஒர் அணியும், வினாடிக்கு ஒரு துணியுமாக அக்குழந்தை அலங்கரிக்கப்படும். உண்மையான கண்ணனுக்குக் கூட யசோதை 'கிருஷ்ணன் கொண்டை' என்று இந்நாளில் வழக்கப் படும் முறையில் தலையை அலங்கரித்திருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/89&oldid=1496769" இலிருந்து மீள்விக்கப்பட்டது