பக்கம்:அரசியர் மூவர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 ☐ அரசியர் மூவர்



வனைந்தபொன் கழற்கால் வீரன்
     வணங்கலும், குழைந்து வாழ்த்தி,
'நினைந்ததுஎன்? இடையூறு உண்டோ
     நெடுமுடிபுனைதற்கு?' என்றாள்.” (1607)

இராமன் தலையில் புதியதாக அமர வேண்டிய முடி, அவன் தலையில் இல்லாத காரணத்தால் கவிஞன் பொன்னால் ஆகிய வீரக் கழலை அணிந்தவன் என்று கூறுகிறான். “வனைந்த பொன் கழல் கால் வீரன்” என்று கூறியதில் மற்றும் ஒரு பொருட்சிறப்பும் அமைந்து கிடக்கிறது. இராமன் முடி புனையப் போகிறான் என்ற மகிழ்ச்சியில் அனைவருடனும் சேர்ந்து நாமும் மகிழ்ந்திருக்கும் வேளையில் அவன் காடாள வேண்டிய கட்டம் வந்து விடுகிறது. நம்மையும் அறியாமல் அவனுடைய துன்பத்தில் நாம் பங்கு கொள்கிறோம். இக்கொடுமையை இன்னும் அறிந்துகொள்ளாமல் முடி இல்லாத அவன் தலையைக் கண்டு வருந்துகிற தாயுடன் சேர்ந்து நம் வருத்தமும் மிகுதியாகிறது. இந்தச் சந்தர்ப்பத்தின் வருத்தத்தைக் குறைக்க வேண்டிய கவிஞன் இராமனுடைய வீரத்தை நினைவூட்டுகிறான். 'பொன்முடி தலையில் இருக்க இராமன் கொடுத்து வைக்கவில்லையே' என்று வருந்தும் நம்மை நோக்கிக் கவிஞன் அந்தப் பொன்முடி அவனுடைய தலையை அடையத் தகுதியற்றது என்பான் போல, அவனுடைய காலிலேதான் பொன்னாலாகிய வீரக் கழல் இருக்கிறதுஎன்கிறான். அன்றியும், அவன் வீரன் என்று குறிப்பிட்டமையின், தூய வீரனாகிய அவனுக்குத் தன் நாடும் காடும் ஒன்றுதான் என்பதையும் குறிப்பாற் பெறவைக்கிறான்.

நடுவு நிலைமையும் அமைதியும்

சாதாரணத் தாயாய் இருப்பின் இராமன் முடியற்று நிற்கும் நிலையைக் கண்டு தன்னை மறந்து நிலையில் ஒப்பாரி வைக்கவும் தலைப்பட்டிருக்கலாம். அவ்வாறு ஒரு தாய் செய்திருப்பின், அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/96&oldid=1496782" இலிருந்து மீள்விக்கப்பட்டது