பக்கம்:அரசியர் மூவர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 97



கித்ததாகவோ அவனால் தடை உண்டோ என்று கேட்டதாகவோ கொள்ள ஒரு சிறிதும் இடம் இன்மை காண்க.

எதிர் பாரா விடை

இத்தனை வினாக்களும் சாதாரணமான முறையிலேயே கேட்கப்படுகின்றன. அவள் சற்றும் எதிர் பாராத விடை அவளை இப்பொழுது தாக்குகிறது.

“மங்கை அம்மொழி கூறலும் மானவன்
செங்கை கூப்பி, 'நின் காதல் திருமகன்
பங்கம் இல்குனத்து எம்பி பரதனே
தங்க மாமுடி சூடுகின்றான்,' என்றான்.”
(1608)

"இடையூறு ஏதேனும் உண்டோ முடி சூட?” என்ற கேள்வி ஒரளவு பொருத்தம் இல்லாமல் வந்துவிட்டது கோசலையினிடத்து. 'ஏன் முடி சூடவில்லை? என்று கேட்டிருக்கலாம். அப்பொழுது இராமன், ‘பரதன் முடி சூடப் போவதால்” என்று விடை கூறியிருப்பான். ஆனால், 'இடையூறு என்ன?' என்று கேட்ட பிறகு "பரதன் முடி சூடப் போகிறான்” என்று இராமன் மொட்டையாகக் கூறி இருப்பின், ‘பரதன்தான் இடையூறாகக் குறுக்கே நிற்கிறான்.” என்றல்லவா பொருள் பட்டுவிடும்? அவ்வாறு கூறுவது இராமனுடைய எண்ணமே அன்று. கோசலை கேள்வியோ, இக்கட்டாய் அமைந்துவிட்டது. எனவே, அக்கேள்விக்கு உரிய விடையைத் தாராமல், இராமன், “நின் காதல் திருமகன்” என்றும், “பங்கம் இல் குணத்து எம்பி” என்றும் பரதனுக்கு அடைமொழி தரத் தேவைப்படுகிறது. இராமனுக்கு முடி சூட்ட இடையூறு நேரும் என்று கோசலை கனவிலும் கருதவில்லை. அவ்வாறு கருதி இருப்பினும், பரதன் காரணமாக இடையூறு ஏற்படும் என்று அவள் கற்பனையிலும் கருத இடம் இல்லை. ஆதலால்தான் இத்தகைய வினாவை அவள் கேட்கிறாள்.

இவ்விடை கோசலையை ஒர் உலுக்கு உலுக்கி விட்டது. எவ்வளவு ஆவலுடன் அவள் எதிர்பார்த்து நின்றாள் என்பதைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/99&oldid=1496789" இலிருந்து மீள்விக்கப்பட்டது