பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை திரு. நா. மகாலிங்கம் பி எஸ்.சி, எப்.ஐ.ஈ., அவர்கள் தலைவர், இராமலிங்கர் பணிமன்றம் இசை ஒரு அற்புதமான கல். இதை ஒரு எல்லக்குள் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. இதற்குப் போது மானப் பயிற்சியும் அனுபவமும் இருக்க வேண்டும். இப்போது தமிழ்நாட்டில் நல்ல இசை வெகுவாகக் குறைந்து வருகிறது. கவிஞர்களுக்குப் போதுமான இசை ஞானமும், இசை வித்வான்களுக்குப் போதுமான கவிதா ஞானமும் இருப்பதில்லை. பெரும்பாலான வித்வான்கள் தமிழ் நாட்டு இசை அரங்குகளில் தமிழுக்கும் இசைக்கும் சம்பந்தம் இல்லாதது போல, தமிழ்ப் பாடல்களைப் பாடாமல் ஒதுக்கி விடு கிருர்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? தமிழ் இசைக்கு உரிய சிறப்பை தமிழ்ப் புலவர்களும், தமிழுக்கும் இசைக்கும் இருக் கும் தொடர்பை இசை வித்வான்களும் மறந்து இருப்பதே! பருந்து பறந்து செல்லும்போது அதனுடைய நிழலும் அதனுடன் சேர்ந்தே செல்லும். அது போல பாடலும், பொருளும், உணர்ச்சியும் ஒன்று சேர்ந்து இசைத்தல் வேண்டும். இந்த இலக்கணப்படி செய்யுள் இயற்றியும் தேவாரம், திருவாசகம் போன்ற செய்யுட்களை இசையுடன் பாடியும்