பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 f திருவருட்பா பாடல்கள், சாதி, மத, இன பேதமின்றி, எல்லா மக்களும், பயின்று, பாடி அனுபவிக்க வேண்டிய அருமையான பாடல்களாகும். வள்ளலார், தாமே இசை அமைத்து, இராகம், தாளக் குறிப்புகள் தந்து நூற்றுக்கணக் கான இசைப்பாடல்களும் இயற்றியுள்ளார். அப்பாடல்களின் பொருள் நயத்தையும் இசைச் சிறப்பையும் உணர்ந்து பிற்காலத்தில் தோன்றிய மகாவித்வான்களான திரு.கோடீஸ் வரஐயர் அவர்கள் 91, பாடல்களுக்கும், திரு. சி. ஆர். பூர்வாச ஐயங்கார் அவர்கள் 21, பாடல்களுக்கும் சுரக்குறிப் புகள் எழுதியதைத் தொகுத்து 'திருஅருட்பா கீர்த்தனைப் பகுதி' என்னும் தலைப்பில், திரு. ஆ. பாலகிருஷ்ணபிள்ளை அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பே அருமையான நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்குப்பிறகு இப்போது தான் அருட்பா இசையமுதம்' என்ற பெயரில் இராக, தாள, சுரக் குறிப்போடு இந்நூல் வெளியிடப்படுகிறதென்று நினைக்கின்றேன். இதில் வியந்து பாராட்டத்தக்க அம்சம் என்னவென்ருல் இசைப்பாடல்களல்லாத பல்வேறு சந்தங் களில் உள்ள விருத்தப் பண்களே நூற்றுக்குத் தொண்ணுாறு விழுக்காட்டிற்குமேல் இசைப்பாடல்களாக மாற்றியிருப்பது ஒன்று? அடிகளாரின் இசைப்பாடல்களிலும் சிலவற்றை எடுத்து, அவைகளுக்குப் புதிய இராகமும், தாளமும், வடிவமைப்பும் தந்து இசையமைத்திருப்பது மற்ருென்று! இவ்வரிய சாதனை களே மிகச்சுலபமாகப் புரிந்திருக்கும், கவிஞர். திரு. கு. சா. கி. அவர்களையும், குருவாயூர் அம்மையாரையும் இசை உலகம் மனமாரப் பாராட்ட வேண்டும். திருமதி குருவாயூர் பொன்னம்மாள் அவர்கள் திருஅருட் பாவில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். நல்ல இசைப் பரம் பரையில் வந்தவர். தமிழ்ப் பாடல்களைச் சொற் குற்றமும்