பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துரை சங்கீத கலாநிதி செம்மங்குடி. திரு. ரா. ரீநிவாஸய்யர் அவர்கள் ரீ ரீ. இராமலிங்க ஸ்வாமிகளின் திரு அருட்பாக்களை கலைமாமணி, கவிஞர் திரு. கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கீர்த்தனைகளாகத் தொகுத்துள்ளார்கள். இம் மஹத் தான ஸேவையை இசை உலகிற்குச் செய்துள்ள திரு கு. சா. கிருஷ்ணமூர்த்தியவர்களை எவ்வளவு பாராட்டினலும் போதாது. . இந்நூலில் 101 கீர்த்தனங்கள் அடங்கியுள்ளன. இக் கீர்த்தனைகள் அருட்பா இசை அரசி - கலைமாமணி குருவாயூர் திருமதி பொன்னம்மாள் அவர்கள் இசை அமைத்து ஸ்வர தாளக் குறிப்புடன் வெளிவரும் பக்தி ததும்பும் இந்த இசை மலரை தமிழிசை உலகம் பயன்படுத்திக் கொண்டு வரவேற்கு மென நம்புகிறேன். இதிலடங்கியுள்ள 101 கீர்த்தனைகளையும் பழமையான ரக்தியான பல ராகங்களிலும், பல தாளங்களிலும், அதிக மாகப் பிரச்சாரத்திலில்லாத மது வந்தி, வந்தனதாரிணி சந்திரகெளன்ஸ் முதலான ராகங்களிலும், இசை அமைந் திருப்பது பாராட்டுதற்குரியதாகும். கீர்த்தனங்களை எளிய முறையில் எல்லோரும் சுலப மாகப் புரிந்து கொண்டு பாடக் கூடிய விதத்தில் ஸ்வர, தாளம் அமைத்திருக்கிருர், இசை உலகிற்கு இப்பெரிய தொண்டினைச் செய்துள்ள அருட்பா இசை அரசி-கலைமாமணி குருவாயூர் திருமதி பொன்னம்மாள் அவர்களையும் கலை மாமணி, கவிஞர் திரு கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் மனம் குளிர வாழ்த்துகிறேன். இங்ங்னம் செம்மங்குடி ரா. ரீநிவாலய்யர்