பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிவுரை சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன் ஒரு நாள், சிலம்புச் செல்வர், ஐயா, திரு ம. பொ. சி. அவர்கள் எழுதிய வள்ள லார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூல் வெளியீட்டு விழா வில், சில பாடல்களை நான் பாடவேண்டுமென்று ஐயா, விரும்புவதாகக் கூறி-அவசியம் பாடியே ஆகவேண்டு மென்றும் கவிஞர். திரு. கு. சா. கி. அவர்கள் வற்புறுத்தினர். முற்றிலும் விருத்தப் பண்களே நிறைந்துள்ள அருட்பா வில்-எந்தெந்தப் பாடல்களைப் பாடுவது? எத்தனை நேரம் எவ்வளவு பாடல்களை எப்படியெப்படிப் பாடுவது? என்று ஒரே திகைப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. சில நொடி கள் சிந்தனையில் ஆழ்ந்திருந்த கவிஞர்- தெய்வமணிமால்ை யிலுள்ள, 'ஒருமையுடன்' என்ற விருத்தத்தை காப்பிராகத் திலும், கண்டசாப்பு தாளத்திலும்-திருப்புகழ்ச் சந்தப் பாணியில் திடீரென்று பாடிக் காட்டினர், அருமையாக இருந் தது, அவ்வளவுதான், எனக்கும் உற்சாகம் பிறந்து விட்டது, அதே பாணியை மனதில் கொண்டு-'திருவருட்பா நூல் திரட்டு அமுதக் கடலில் மூழ்கிப் பார்த்த போது அற்புத மான தாள-சந்தபேதச் சொற்கட்டுகள் நிறைந்தஉள்ளத்தைஉருக்கி உள்ளொளி பெருக்கத்தக்க-நவரத்தினக் குவியல்களாக எங்கும் குவிந்து கிடக்கும் ஒருதங்க்ச் சுரங்கத் தில் நுழைந்து விட்டதைப் போன்ற பேரானந்தம் நெஞ்சில் நிறைந்தது! உற்சாகம் கரை புரண்டது! இராகங்கள் பிறந்தன: தாளங்கள் தவழ்ந்தன! விருத்தப் பண்களெல்லாம் ர்த்தனை வடிவம் பெற்ற உருப்படிகளாக மலர்ந்தன! சுருக்க் மாகச் சொல்வதானல்-எல்லையற்ற இப்பேரருட்பணிக்குப், புல்லினுங் கடையளான என்னை ஒரு கருவியாகப் பயன்படுத் திக் கொண்ட வள்ளற் பெருமானின் திருவருட் கருணைதை எண்ணி எண்ணி என் நெஞ்சம் நெகிழ்ந்து, ஆனந்தக்கண்ணிர் துளிர்க்கின்றது. சங்கீத மும்மூர்த்திகளும், வள்ளற் பெருமான் போன்ற் ஞானிகளும், காலமெல்லாம் பக்தியோடு பாடிப் பாடியே இறைவனின் பேரருளைப் பெற்ருர்கள். 'வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம்.இது, கூவுகின்றேன் உமையே’ என்ற வள்ளற்பெருமானின் வாசகத்தைக் கூறியே இசைவித் வான்களையெல்லாம் பணிவோடு கூவி அழைக்கின்றேன்.