பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இத்தெய்வீகத் திருவருட்பாக்களைப் பக்தியோடு மனம் உருகிப் பாடும்போது ஆத்மானந்தமும், சுத்த சன்மார்க்கப் பரவச நிலையும் கை கூடும். இது என் அனுபவத்தைக் கொண்டு கூறும் சத்தியமான வார்த்தைகள். பாடிப் பயனடைய வேண்டுகின்றேன். எனக்கு ஒரளவேனும் இசைஞானம் இருக்குமேயானல், அதற்கு தெய்வபக்தி நிறைந்த என் தாய் தந்தையர்களும், எனது குருநாதர், சங்கீத கலாநிதி செம்பை, பூரீ வைத்தினத பாகவதர் அவர்களின் இசைபயிற்றுவிக்கும் ஆற்றலும் ஆசியும், நான் வழிபடும் குருவாயூரப்பனின் திருவருள் துணை யுமே காரணம் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்ளு கின்றேன். இசைத் துறையில் பறங்கி மலையினும் தாழ்ந்த நிலையில் இருக்கும் என்னை, இமயமலையினும் உயர்ந்த நிலையில் உள்ள இசை மேதைகளும், இலக்கிய மேதைகளும் வழங்கியுள்ள புகழுரைகளைக் கண்டு, உடல் சிலிர்க்கின்றது, உள்ளம் நாணுகின்றது! அப்பெரியோர்கள் இருக்கும் திக்கு நோக்கித் தலை தாழ்த்தி வணங்குவதைத் தவிர எப்படி நன்றி கூறுவ தென்று தெரியாமல் திகைக்கின்றேன். இப்பணியில் எனக்கு இடையருத உற்சாகமும் ஊக்கமும் அளித்து உருப்படிகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து இசை யமைப்பிற்கு ஏற்ற ஆலோசனையும் கூறி வழிகாட்டியாக விளங்கும் கவிஞர் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டவளாவேன். பாடல்களுக்கு சுரக்குறிப்புக்கள் எழுதிப் பேருதவி புரிந்த சங்கீத வித்வான். திரு. ஏ. ஆர். கண்ணன் அவர்களுக்கும், குறிப்பாக இப்புத்தகப் பதிப்பிற்கான பொருளுதவியை அன்போடு வழங்கிய தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தின் நிர்வாகத்தினர் அனைவருக்கும், என் நன்றியைத் தெரி வித்துக் கொள்கின்றேன். வணக்கம்! குருவாயூர் நிலையம் குருவாயூர் பொன்ன்ம்மாள் 5. சாரதாபுரம் 15-4-83. மயிலை-சென்னை-4 தொலைபேசி எண் :- 75372