பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை ம. பொ. சிவஞானம் அவர்கள் புனித ஜார்ஜ் கோட்டை தலைவர் சென்னை-600 009 தமிழ்நாடு சட்டமன்ற மேலவை 3–5–1983 'அருட்பா இசையமுதம்' என்னும் இந்நூல் தமிழரசு இயக்கக் கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் இராமலிங்க சுவாமிகளின் திருவருட்பாக்களிலிருந்து தொகுக் கப்பட்ட 101 பாடல்களைக் கொண்டதாகும். "கலைமாமணி', 'அருட்பா அரசி' குருவாயூர் பொன்னம்மாள் இந்நூலிலுள்ள பாடல்களுக்கு இசை யமைத்துக் கொடுத்திருக்கிருர். கவிஞர் கு.சா.கி., தமிழில் செய்யுள் புனைந்தளிக்கும் கவிஞர் மட்டுமல்ல: அதற்கு மேல் நல்ல இசை ஞானமும் உடையவர்: இவருடைய இசைப் பாடல்களை இசைப் பேரறிஞர்கள் எம். எம். தண்டபாணி தேசிகர், கே. பி. சுந்தராம்பாள், மதுரை சோமசுந்தரம், சி. எஸ். ஜெயராமன் சீர்காழி கோவிந்தராஜன், நாடகக் கலைஞர் ஒளவை தி. க. சண்முகம் ஆகியோர் பல்லாயிரவர் குழுமியுள்ள இசையரங்கு களிலேயும், நாடக அரங்குகளிலேயும் பாடி, என்னை மறந்து கேட்டு நான் ரசித்ததுண்டு. இத்தகு தகுதிவாய்ந்த இசைப் பாவலரும், இசைப் பாடகியும் பெருமுயற்சி எடுத்து இந் நூலைப் படைத்துள்ளனர். அவர்களின் உழைப்புக்காக அவர் களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருவருட்பாவிலுள்ள பாடல் க ள் அனைத்துமே மரணத்தை வென்ற மகானல் பாடப்பட்டவை. அவ்வளவும் பக்தி ரசம் நிறைந்த கனிகள். அவற்றுள்ளும் மிகப் பழுத்த - தொட்டால்ே ரசஞ் சொட்டும் - கனிகளைத் தேர்ந்தெடுத்து, பதிப்பாசிரியர் இந்நூலில் தந்துள்ளார்.