பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வள்ளலார், வெண்பா-விருத்தப்பா-அகவற்பா-கீர்த் தனைகள் என்ப் பல வகையில் தம் பாடல்களைப் படைத் துள்ளார். விருத்தப்பா - வெண்பா - அகவற்பா ஆகிய செய்யுட்களை இசைப் பாடல்களாகக் கருதும் வழக்கம் புலவ ருலகில் இல்லை. அது சரிதான். ஆனால், இப்போது இரண் டடிகளான குறட்பாக்கள் கூட, இசைப்பாடல்களாக வடி வமைத்து, இசையரங்குகளில் திறம்படப் பாடப்படுநின்றன. கலைமாமணி குருவாயூரம்மாள் அவர்கள், வள்ளலாரின் விருத்தப்பாக்களையும், அகவற்பாக்களையும் கூட இசைப்பாடல் களாக்கியுள்ளார். குறிப்பாக, அறுசீர்களால் அமைந்த 32 செய்யுட்களைக் கொண்ட திருவடிப் புகழ்ச்சியிலிருந்து 10ஆவது செய்யுளைப் பிரித்தெடுத்து, அதற்கு ராகமும் தாளமும் அமைத்து, தனியொரு இசைப் பாடலாகத் தந்துள்ளார். மற்றும், விருத்தப் பாக்களைப் பல்லவி அனுபல்லவி", 'சரணம் என்று மூவகையாகப் பிரித்து, ராக - தாளம் அமைத்து, இசைப் பாட்டாக்குவதில் சிரமம் இருக்கிறது. அந்தச் சிரமத்தை மிக எளிதாக வென்றிருக்கிருர். இசை யமைத்தவர் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வட சொற்களுக்கு மாற்ருக எடுப்பு - தொடுப்பு - முடிப்பு' என்ற தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். வள்ளலார், தமது இசைப்பாடல் (கீர்த்தனை) களுக்கெல் லாம் தாமே இன்ன ராகம், இன்ன தாளம் எனத் தந் துள்ளார். அவற்றில் சிலவற்றிற்கு, தங்களுக்குப் பிடித்த மான ராகத்தையும் தாளத்தையும் தொகுப்பாசிரியரும், இசையாசிரியரும் தந்துள்ளனர். சான்ருக, அருட்பாவிலுள்ள வருவார் அழைத்து வாடி’ எனத் தொடங்கும் கீர்த்தனைக்கு, வள்ளலார் தந்துள்ள ராகம் பியாகடை என்பதாகும். அதனை, கரகரப்ரியா" வாக குருவாயூரம்மாள் மாற்றியுள்ளார். .