பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 அதுபோல, தெண்டனிட்டேனென்று சொல்லடி' என்ற கீர்த்தனைக்கு, வள்ளலார், தோடி ராகத்தைத் தந் துள்ளார். இதனை சங்கராபரணம்’ ஆக மாற்றியுள்ளார் கலைமாமணி குருவாயூர் பொன்னம்மாள். இப்படி, திருவருட்பாப் பாடல்களுக்கு புத்தணி பூட்டி" புதுமெருகேற்றி மக்களுக்கு வழங்கியுள்ளனர் இந்நூலாசிரி யர்கள். அவர்களுடைய இசைப் புலமைக்குப் பாராட்டு கூறும் தகுதி எனக்கில்லை. ஆயினும், அருட்பாவிலுள்ள அனுபவம், ஆசிரியர்கள்பால் எனக்குள்ள அன்பு காரணமாக அணிந்துரை தர இசைந்தேன். திருவருட்பாக்கள் அனைத்தும் பக்திப் பாடல்கள். இதனை மறந்து, இசைக்கு முதன்மை தந்து, சொற்களை எழுத்தெழுத் தாகப் பிரித்து, ராக - தாள “வித்தை' களால் ரசிகர்களைக் கவர்ந்து 'சபாஷ் பட்டம் பெற முயன்ருல், 'பக்தி' பின்னுக்குப் போய்விடும். குருவாயூர் பொன்னம்மாள் பக்தி ரசம் ததும்பப் பாடும் ஆற்றலுடையவர். அதற்காக என்னிடம் “அருட்பா இசை யரசி' என்ற பட்டமும் பெற்றவர். அம்மையாரும், கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தியும் அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ள இந்நூல், இசையுலகில் ஏற்றம் பெறுமாக! அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுகள். ம. பொ. சிவஞானம்