பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 - அருணகிரிநாதர் 'சுருதி முடி’ என்பதால் சடாகூடிர மந்திரம் சரவணபவ” என் பதும் விளங்குகின்றன. 149-ஆம் பாட்டு-தலைவலி மருத்திடு-என்பது நோய், களை அகற்ற வல்ல ஒரு திருமந்திரப்பாடல். 150-ஆம் பாடல் கலகவாள் விழி என்பதில் முருகனது. காவிய நூலை ஆராயும் பணியே பணியாக அமையும்1 வாழ்வை விரும்புகின்ருர். இதன் கருத்து பூநீ சம்பந்தப் பெருமாகை முருகவேள் உலகுக்கு உதவிய தேவாரத்தை ஆராயும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்; அங்ங். னம் மேற்கொள்ளுவதால் இடர்படா வாழ்வை நாம் பெற லாம்!-என்பது. இப்பாட்டில் வனச மேல் வரு தேவா என் றது. சரவணப் பொய்கையிற் பதுமப் பாயலில் (தாமரை மல. ரில்) முருகன் தோற்றியதைக் குறிக்கும். சரவணை தணில் முளரியின் வரு முருகோனே (133), பத்மந் தனிற் பிறந்த குமரேசா (722), கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ளச் சரோருகங்கள் பயில் நாதா (316) என வருவனவுங் காண்க, பரிபாடல் (5ல்)-'பதுமத்துப் பாயற் பெரும். பெயர் முருக’ என வருதலுங் காண்க. 154-ஆம் பாடல் சகடத்தில் என்பதில் இவ்வுடலைச் 'சுடு கட்டைச் சுடலைக் கட்டைக்கு இரையிட்டு என்றது ஒர் அரிய பிரயோகம். 156-ஆம் பாடல் 'அகல் வினை” என்பதில் பழநி மலை யைச் சிவமயமாம் நின் பழநி என்ருர். வைகைநீரில் எதிர்த் துச் செல்லும்படிச் சம்பந்த சுவாமிகள் எழுதிவிட்ட வாழ்க அந்தணர்’ என்னும் திருப்பாசுரத்தின் பெருமையை உணர்ந்து, தேவாரத்தைத் திருக்குறளினும் மேம்பட்ட தென்றுத் தெளிவுற 1. "உனது காவிய நூலாராய்வேன் இடர்படாதருள் வாழ்வே நீயே தரவேணும்’-இத்திருவாக்கை மேற். கெர்ண்டே 'தேவார ஒளி நெறி” என்னும் சம்பந்தர் தேவார ஆராய்ச்சி நூலை அடியேன். எழுதி வெளி: யிட்டது.