பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 87 மைேலயம் பெற வேண்டி அடிக்கடி திருவடி தீகூைடியை விரும்பி மனது துயரற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட மனது பதமுற எனது தலை பதம் அருள்வாயே'என வேண்டினர். இந்த வேண்டுகோளுக் கிரங்கி முருக வேள் திருவடி சூட்டினு ரென்பது-114-ம் பாடல். களப முலை' என்பதில் சிவவெற் பமர்ந்த குக வேலா-எனது தலை யிற் பதங்கள் அருள்வோனே என வருதலால் தெரி கின்றது. 177-ம் பாட்டு; குழலடவி இப்பாடலின் பின் நாலடி யிற் சிலேடை நயம் அறிந்து இன்புறக்தக்கது, 179-ம் பாட்டு ஞானங் கொள்', 190-ம் பாட்டு மூலங் கிளர் இவை அருணகிரியார் யோகநிலைச் சித்திகள் யாவும் கைவந்த பெரியார் என்பதைப் புலப்படுத்துகின்றன. --- 181-ம் பாட்டு; நிகமம்-முருகவேள் தம்மை வழி யடிமை கொண்டதை மனந் திகைத்த பாவியை வழியடிமை கொண்டு என்பதால் விளக்குகின்ருர். 185-ம் பாட்டு, ‘மந்தரம்'-பழநித் தலத்தில் அகத்திய முநிவர் பூசித்தது சொல்லப்பட்டுளது. 186-ஆம் பதிகம் மலரணி -கடப்ப மாலையுடன் தாம் பாடிய தமிழ்ப் பாவையும் பன்னிரென முருகவேள் ஏற்றுக் கொண்டார் என இப்பாட்டில் விளக்கியுள்ளார். ஈற் றில், கதித்த மலை என வருவது ஊற்றுக்குழி (கோயமுத் துார் ஜில்லா) ரெயில் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது என் றும், அது சிறந்த சுப்ரமண்ய ஸ்தலம் என்றும் கூறுவர். 189-ஆம் பாட்டு- முருகு செறி-இதில் அமளிபடும் அமளி என்னும் சொல்லழகு மகிழத் தக்கது. --- 194ஆம் பாட்டு- விதமிகைந்தினி-இதிற் பதி யைக் காசியின் மீறி புழநி என்சூர்.