பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 அருணகிரிநாதர் என வேண்டினர் (962). இவ்வேண்டுகோள் பின்னர் எங்ங்ணம் சித்தித்தது என்பதை மேலே திருவகுப்பு என் னும் நூலைப் பற்றி எழுதுமிடத்தே விளக்குவோம். 968-ஆம் பாடல் கலை மேவு என்பது பவானித் தலத் துக்கு உரியது. என்று முன்னரே (88-ஆம் தலம்-பக்கம் 58) கூறினுேம். முத்தமிழும் வளர்ந்த தானம் மதுரை என் பதை விளக்க 'முத்தமிழ்க் கூடல்' (485) எனக் கூறி, முத் தமிழ் வல்ல சங்கப்புலவர்கள் பேர் பெற்றிருந்த அற்புத மஹாநகர் ("கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீரற்புத மாநகராகிய கூடற்பதி") என அத்தலத்தைப் போற்றி னர். (967) மதுரையி லிருந்த படியே படைவீடுகளில் முதலாவ தான (128) திருப்பரங்குன்றத்துக்குப் (2-15) போய்ப் பெருமானைத் தரிசித்துப், பெருமான் அங்கு தேவ: சேனையை மணந்ததைக் கூறியும் (10), மணிவாசகப் பெருமானுக்கு உபதேசித்த குருநாதரும் வழிபடக் குருக்களாய் நின்ற பெரியோர் எனப் பராவியும் (4). பிரம னும், தேவர்களும், முநிவர்களும் முருகவேளை வழிபட்ட தலம் பரங்குன்றம் என விளக்கியும் (5, 9). வயலூரிற் கூட்டி லிருக்கும் கிளிகள் 'ஐந்துகர பண்டிதன் தம்பி’ என முருக வேளை அழைக்கப் பயின்றிருந்ததை எடுத்துக் கூறி யும் (14), பாரிஜாத விருகூடித்தைப் பூமியிற் கொண்டு வரவேண்டி சங்கநாதத்தாற் கிருஷ்ண மூர்த்தி தேவர் களைக் கலக்கின விஷயத்தைக் கூ றி யு ம் (15, 889, 1279)-பதிகங்கள் பாடி மகிழ்ந்தார். வயலூரையும் மறவாது போற்றினர் (14). பின்னர், ஆருவது படை வீடாகிய (129) ւIէք முதிர் சோலை மலையைத் (433–448. 572*, 938*) தரிசித்து அத்தல்த்தில் உள்ள "நூபுர கங்கை' என்னும் சிலம்பாற்றின* "ஆயிர முகங்கள்

  • முத்தமிழ்க்கூடல் முதல்வன்-கல்லாடம் 77. 물 ப்ர்ட் ப்ேதம் பார்க்கவும். * .
  • சிலம்பாறு-நூபுரகங்கை-சோலை மலையில் உள்ளது: