பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 93 10_( அங்கைமென்) பாடலில் பிரானை 'உண்ட நெஞ்சறி தேனே' என அருமையாக வாழ்த்தியும் வணங்கினர். (iv) 19, 77 (அம்பொத்த, நிதிக்கு) பாடல்களில் தமிழ்ச்சந்த மறையை, முருகா! நீ சிவ பிராற்கு உபதே சித்தாய் என விளக்கினர். (தமிழ்ச்சொற் சந்தம்-தேவாரம் எனவும் கொள்ளலாம்) (v) 80-(படர்புவி), சுவாமிகள் காலத்திற் திருக் குறளாதிய நூல்களைக் கற்றுப் புலவர் எனப் பலவகைப் பட்டங்களைப் பூண்டு திரிந்தவர் இருந்தார்கள் என்பது தெரிகின்றது. (vi) 18, 47, 71 (கொடியனைய, அந்தகன், தரிக் கும்); நினைத்தால் முத்தியளிக்கும் சிவஸ்தலமாகிய திருவண் ளுமலையைப் போலத் திருச்செந்துார்த் தலமும் தன்னைக் கரு துவார்க்கு முத்தியளிக்கும். எங்ங்னமெனில், திருவண்ணு மலைத் தலம் யான் பரம்’ என ஆணவங் கொண்ட பிரம விஷ்ணுக்களுக்கு எட்டாத தான மாதலால், அது ஆணவம் அற்ருேர்க்கே சிவம் விளங்கும் என்பதைக் குறிப்பாற் காட்டி ஆன்மாக்களை உய்விக்கின்றது; அதுபோலத் திருச்செந் துார்த் தலம்-அலைகள் மோதி ஒயுங் கடற்கரையில் உள்ள தலமாதலின் (புறத்தே அலை ஒயும் இடத்தில் முருகன் திருக் கோயில் கொண்டுள்ளது போல) அகத்தே எங்கு எப்போது மன அலை ஒய்கின்றதோ அங்கு அப்போது ஜோதி முருகன் விளங்கிக் கோயில் கொள்வான் என்பதைப் புலப் படுத்து கின்றது. இக்காரணத்தால் தான் சுவாமிகள் 47-ஆம் பதி கத்தில் 'செந்திலை யுணர்ந்துணர்ந்துணர் வுற” என்றும், 18-ஆம் பதிகத்தில் 'செந்திலென்றவிழ வுளது உருகி வரும் அன்பிலன்” என்றும், 71-ம் பதிகத்தில் திருச் செந்தி2ல உரைத்துய்ந்திட” என்றும் கந்தரந்தாதியில் செந்துார என்னத் தெளிதருமே (24). செந்துார் கருது” (33) என்றும் உபதேசித்துள்ளார். !