பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அருணகிரிநாதர் ஊழுக்குக் கூத்தன்; உவக்கப் புகழேந்தி கூழுக்கிங் கெளவையெனக் கூறுஎன்னும் தனிப்பாடலும் எழுந்தது. வில்லிபுத்துாரரது ஆடம்பரங்களைக் கண்டோ அக் காலத்துப் புலவர்களது படாடோபங்களைப் பார்த்தோ அருணகிரியார் மிக அஞ்சி அத்தகைய ஆணவ அழுக்கு தம்மை அசுத்தப் படுத்தாதிருக்க வேண்டும் என்னுங் கருத்துடன் 'சங்க பாடல், திருவளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழிய்ை ஒதியே உணர்ந்து, பல்-சந்தமாலை மடல் பரணி கோவையார் கலம்பகம் முதலுளது கோடி கோள் ப்ரபந்தமும் வகை வகையில் சேர் பெருங்கவி-சண்டவாயு மதுரகவி ராஜனுனென் வெண்குடை விருது கொடி தாள மேள தண்டிகை வரிசையோ டுல்ாவு மால் அகந்தை-தவிர்ந்திடாதோ செந்திலில்-உரிய அடியேனையாள வந்தருள் தம்பி ரானே' (80) எனச் செந்துார்ப் பிரானிடம் பிரார்த்தித்தனர். வில்லிபுத்துாரரொடு செய்தவாது திருச் செந்துாரி லேயோ, திருச்செந்துார் தரிசித்தபின் சமீப காலத்திலேயோ நடந்திருக்க வேண்டுமென்பது கந்தரந்தாதியிற் சொல்லப் பட்ட தலங்களுள் செந்துரே அதிகமாகக் கூறப்பட்டுள்ள தால் ஒருவாறு பெறப்படும். அந்தாதி நூறு செய்யுள்களில் 26 செய்யுள்களில் திருச்செந்துாரைப் பற்றிச் சொல்லியுள் ளார். அதற்கடுத்தபடியாகச் சொல்லப்பட்ட தலம் திருச் செங்கோடு. அது 11 பாடல்களில் தான் சொல்லப்பட்டுள் ளது. கந்தரலங்காரத்தில்-25 - (தண்டாயுதமும்), 30. (பாலென்பது), 40 (சேல் பட்டு), 46 (நீயான) என்னும் நான்கு பாடல்களும் சுவாமிகள் திருச் செந்தூரிலிருந்த பொழுது பாடிய தனிப் பாடல்கள் எனக் கொள்ளலாம். . திருச் செந்தூர்ப் பெருமான விட்டுப் பிரிய மனம் வராது பிரிந்து (131) நாங்குநேரி (972-974), என