பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 101 வழங்கும் பரீ புருஷமங்கையைத் தரிசித்து, அத்தலத்துப் பாடலிலும் செந்தூர்ப் பெருமானை நினைந்து போற்றி (973)- மாமறை முழங்கு பூரீ புருட மங்கை மாநகர்’ (971) என அத்தலத்தைச் சிறப்பித்து, திருமால் கோயில் கொண்ட நூற்றெட்டு திருப்பதிகளுள் ஒன்ருன தல ாயிற்றே அது என்று இரண்டு பதிகங்களில் (972, 974) திருமாலின் சிறப்பை எடுத்தோதினர். 974-ஆம் பதி பத்தில் 'வானவர் புகழ்ந்த கானவர்” என்றது தேவ ாே?னயைத் தாம் வேண்ட மணந்த முருகவேள் தாமே புனத்துக்கு வந்து வேடர் மகளை மணந்தனரே, என்னே வேடர் தம் தவம் என வானவர் நினைந்து புகழ்ந்ததைக் குறிக்கின்றது. பின்பு (132) வள்ளியூரைத் (417) தரிசித்து ாழ நாட்டுக்குச் செல்லத் துணிவுகொண்டு புறப்பட்டார். 15. ஈழநாட்டுத் தலங்கள்: (3 தலங்கள் 133-135) கடல் தாண்டி ஈழ நாட்டை அடைந்து (133) அருக் கொணுமலை (431)யையும், (133A) கண்டியையும்*, (134) திருக் கோணமலையையும் (432) தரிசித்தார். திருக்கோண மலைப் பதிகத்தில் உள்ள கிளிப்பாடு பூதி என்பது கந்தரது பு.தி என்று பொருள் கொண்டால் இப்பாடல் அருண ரிெயார் வாக்கல்ல எனவும் ஏற்படலாம். இப்பதிகம் சுவாமி கள் வாக்கென்றே கொண்டால் கிளிப்பாடு, பூதி, என் பதற்கு வேறு பொருள் ஏற்படும். அது திருக் கோண ம?ல்க் கோபுர நிலை வாயிலிற் கிளிக்கூடு உள்ள ஒரு ஸ்தானத்தைக் குறிக்கும் எனவும் கூறுவர். திருக்கோண மலையைத் தரிசித்த பின் சுவாமிகள் (135) கதிர் ாமத்தைக் (418-450) கண்டு தரிசித்தார். ஈழந்ாட்டுத் தலங்களைச் சுவாமிகள் நேரில் தரிசித்தார் என ஒரு வாறு துணிந்து கூறலாம். 'திருமகளுலாவு' என்னும் ாட்டில் (418) வரும் 'பெருமாள் காண்” என்னும் காட்சிக் களிப்பாலும், 'மணிதரளம் வீசி அணியருவி சூழ’ | 118 என மாணிக்க கங்கை நதியைக் குறிப்பிடலாலும், " கண்டி-திருப்புகழ் வைப்புத்தலம். திருப் 10.