பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


i02 அருணகிரிநாதர் கனக மாணிக்க வடிவனே (427) எனக்கதிர்காம மூர்த்தி யின் திருமேனி ஒளியைக் குறிப்பதாலும், 'வடவை யாறு சூழ் கதிர்காமம் (419), வ.கிரதிர் கதிர்காமம் (422) என வருவனவற்ருலும், வாழை, மா, நெருங்கிய ஈழம் என ஈழநாட்டை வருணித்ததைக் கொண்டும் (425), உக்ர யானை (எதிர்ப்)படும் ரத்ன த்ரி கோண சயிலம், உக்ர கதிர் காமம் (426) என வருதலாலும், கதிர்காமமாகிய ஈழ நாட்டுத் தலங்களை அருணகிரியார் நேரிற் கண்டு தரிசித் திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. கதிர்காமத். துக்குரிய திருப்புகழ்ப் பாக்களுள் 420-ஆம் பாடலில் |உடுக்கத்துகில்) சீதையைத் தேடிச்சென்ற ஹநுமாருக்கு முருகவேள் அருளினதைத் தெரிவித்தார் 422-ஆம் பாடலில் (கடகட) (அவசமுடன்+அ+ததி-அவசம்= மயக்கம்; ததி=சமயம்) திரிதரு கவிஆள அயில்புயங் கொண்டு’ என்றது பொய்யாமொழிப் புலவரை வேலேந்து வேடகைச் சென்று முருகவேள் ஆட்கொண் உதைக் குறிக்கின்றது போலும். திரிதரு கவி=காட்டு வழியாகச் சென்ற புலவர் (பொய்யா மொழியார்) 423-ஆம் பாடலில் அழுதுலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த என வருவது 'வேதநெறி தழைத் தோங்க ...அழுத...திருஞானசம்பந்தர்” என்னும் பெரிய புராணப் பாடலை நினைவூட்டும். 424-ஆம் பாடல் சரத்தே-இப் பாடலின் அழகிய அமைப்பு அருணகிரியார் ஒருவருக்கே அமையும் என்பது பார்க்கும்பொழுதே புலப்படுகின்றது. 425-ஆம் பாடல் (சரியையாளர்) என்பதில் வயலூரைச் செப்பி, மேன்மை வாய்ந்த திருப்புகழை ஒதும் பாக்கி யத்தை எனக்கு அருளிய பெருமானே 'குமர மேன்மைத் திருப்புகழை யோதற்கெனக் கருள்வோனே!”-எனப் போற்றி மகிழ்ந்தார். 426-ஆம் பாடலில் (பாரவித) "காமுகய்ை நான் பட்ட வலையினின் றும் அடியேனை மீட்டுப் பெண்ணு சையை மறப்பித்தது. நினது திருவடியன்ருே! அதை நான் எங்ங்ணம் மறப் பேன்-மறவேன், மறவேன் எனப் பொருள் படும்படி