பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 103 'மாதர்-குழற் கற்றைமேல். காதில்...முகவட்டத்தில்...அதி காமுகனகப்பட்ட ஆசையை மறப்பித்த (மோக கால்களை மறக்கைக்கும் வருமேர்தான்' எனக் கூறி நன்றி பாராட்டினர். 428-ஆம் பாட்டில் (மாதர் வச') நரகில் வீழ்வார் இவரிவர் எனக் குறிப்பித் தார். கதிர்காமத்தில் வனவேடன் பூசித்த சிறப்பை 433-ஆம் பாடலில் (பழமுதிர்சோலைப்பாடல்) 'வனமுறை வேடனருளிய பூஜை மகிழ் கதிர்காமமுடையோனே'என எடுத்தோதினர். கதிர்காமத் திருப்புகழில் மனப்பாடஞ் செய்ய வேண்டிய அருமை அடிகளாவன : (1) இதமொழி பகரினும் மதமொழி பகரினும் ஏழைக் கிரங்கும் ப்ெருமாளே” *ಿ? (2) அழுதுலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த (கி28) கதிர்காமத்திற் சிலநாள் தங்கி வேலவரைப் பணிந்து பாடிப் பின்பு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். 16. பொதியமலை (பாபநாசம்) முதல் திருப்பெருந்துறை வரையில் (12 தலங்கள் : 136 - 147) i. திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள பாபநாசம் எனப் படும் (136) பொதியமலையைத் (412, 413) தரிசித்து அகத் திய மாமுநிவரது மலையென அதைப்போற்றி, முருக ! அடியேனை நீ உன் அருகு அழைத்து மாதவர் கணத்திற் சேருக என அருள்புரிந்து வேற்பொறி (வேலடையா ளம்), மயிற்பொறி (மயிலடையாளம்) இட்டு என்னையும் ஒருவனுக்கி இருவினை நீக்கியாண் டருளுக : "யாவரும் நகைக்கவே உடல்-மங்குவேனக் 'குறித்து நீ யருகழைத்து, மாதவூர் , o கணத்து மேவென அளித்து, வேல்மயில் கொடுத்து, வேதமும் ஒருத்தளுமென-சிந்தை கூராய்' -எனப் பிரார்த்தித்தார். இத்தகைய வேண்டுகோளை முன் னரே (43) எட்டிகுடி என்னும் தலத்திலும் செய்துள்