பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 105 ரெனும் எனத் தொடங்கும் 955-ஆம் பாட்டு உத்தர கோசமங்கைக்குச் சமீபத்திலுள்ள கொடுமளுர்க் குமரன்' கோயிலுக்கு உரியதோ அல்லது விராலி மலைக்கு அடுத்த 'கோனுட்டுக் கொடுமளுருக்கு (102-ஆம் தலம்| உரியதோ விளங்கவில்லை. பின்னர்த் (140| திருவுத்தர கோசமங்கையைத் 1986) தரிசித்து, (1411 இராமேசுரம் 1987-988) சேர்ந்தார். அத்தலத்துப் பாட்டில் பிரம னைக் குட்டிய லீலையையும், இராமரது பராக்ரமத்தையும் சிறப்பித்து 1987), (141-A) ததுக்கோடியையும்" |165) தரிசித்தார். பின்பு (142) திருவாடானைக்கு 1985) வந்து பணிந்து, (143) ராஜகெம்பீரவளநாட்டு மலையைத் (390) தரிசித்துத் தகூடியாக சங்காரத்தைச் சிறப்பித்த னர். அதன்பின் (144) திருப்புத்துார் (983-984) தரி சித்து அத்தலத்துப் பாடல்கள் இரண்டிலும் வயலூர் முருகனை மறவாது வாழ்த்தினர். 983-ஆம் பாட்டிற் சிவபிரானது பராக்ரமத்தை விவரித்தனர். இப்பாட்டில் 'வயலியல் என்பது (933-ஆம் பாடலுக்குக் கூறியது போல) வயலியில் என்றிருக்க வேண்டுமோ எனத் தோற்றுகின்றது (பக்கம் 73 பார்க்க). பின்னர் (145) விநாயகமலையைத் (366) தரிசித்து ஆண்டவனை 'நமோ நம” எனப் பன்முறை வரும் அருமைப் பாடலால் துதித்து, (146) பிரான்மலை (405-404) என வழங்கும் கொடுங்குன்றத்துக்கு வந்தார். பிரான் மலையில் கிர்த்த தரிசனப் பேறு கொடுங்குன்றம் என்பது தேவாரம் பெற்ற அருமை யான தலம். இங்கு முருகபிரானது சந்நிதி மிக விசேஷ் மானது. இத்தலத்தில் தம்மை ஆண்ட பிரானைத்-தித்தித் திருக்கும் அமுதை-அருணகிரியார் கண்டார், தொழுதார், ஆடினர், பாடினர். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குச் சிவ பிரான் திருப்பனையூரில் திருக்கூத்தொடு தரிசனந் தந்த வாறு சிவ குமாரரும் அருணகிரியார்க்கு இத்தலத்தில்

  • தநுக்கோடி-திருப்புகழ் வைப்புத்தலம்-திருப்.165.