பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அருணகிரிநாதர் தமது நிர்த்த தரிசனத்தைத் தந்தருளினர். அந்த நிர்த்தத் துக்கு ஏற்றவண்ணம் பெரியதொரு சந்தப் பாவை "எதிர் பொருது கவிகடின கச்சுக்களும்பொருது குத்தித் திறந்து” (404) என எடுத்து அதில் 'மட்டற்ற இந்திரிய சட்டைக் குரம்பை யழிபொழுதினிலும் அருள் முருக! சுத்தக் கொடுங்கிரியில் நிர்த்தச் சரண்களை மறந்திடேனே' என வாழ்த்தி வணங்கினர். பின்பு (147) குன்றக்குடியை (405-411)ச் சேர்ந்தார். குன்றக்குடி என்பது மயூரகிரி, மயூராசலம் என வழங் கும் அருமைத்தலம். இத்தலத்தில் சிலநாள் தங்கி அரு மையான பாடல்களைப் பாடி மகிழ்ந்தார். வயலூரையும் வயலூர்க் கணபதியையும் சிவபிரானையும் வாழ்த்தினர் (406-407). தேறுை புடைசூழும் தலம் குன்றக்குடி எனவும் விளக்கினர் (408, 411). தேனுறு கூறப்பட்டிருப் பதால் பொதுப்பாடல் 1041. ஊனே தானு என்பதையும் இத்தலத்துப் பாடலாகக் கொள்ளலாம். குன்றக்குடியைத்தரி சித்தபின்பு (148) திருப்பெருந்துறைக்கு (847-849) வந்தார். 17. திருப்பெருந்துறை முதல் திருவண்ணுமலை சேரும் வரையில் (6 தலங்கள்: 148-153) திருப்பெருந் துறையைத் தரிசித்து, 'மாணிக்க வாச கப் பெருமானுர்க்கு “ஞானப்ர சங்கம்” செய்த குருவுக்கும் குருவே! 'திருக் குருந்தடியமர் குருத்வ சங்கர”ரொடு வீற். றிருக்கும் பெருமானே ! (847, 848) என ஆண்டவனைப் போற்றினர். பின்பு (148A) *திருக்களர் என்னுந் தலத். தைப் பணிந்து, (149) பெருங்குடியை (704) வணங்கி" அருமைப் பாடல் ஒன்று பாடி வயலூர்ப் பெருமானையும் வாழ்த்தினர். இந்தப்பாடலில் இலங்கை நகரில் ஹநுமார் தீயிட்ட சேதி வெகு அழகான சொற் ப்ரயோகத்தால் விளக் கப்பட்டுளது.

  • திருக்களர்-திருப்புகழ் வைப்புத் தலம் 28-ஆம் பாடலைப்

பார்க்க.